2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

ஒரு கோடி 50 இலட்சம் நிதியொதுக்கீட்டில் பிரதேச சபை திறப்பு

Kogilavani   / 2014 மார்ச் 29 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா

உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சின் ஒரு கோடி 50 இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டின் மூலம் நிர்மாணிக்கப்பட்டஅக்கரைப்பற்று பிரதேச சபைக்கான புதிய கட்டடம் வெள்ளிக்கிழமை(28) வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.றாஸிக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன்,அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸக்கி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது,மாணவர்களின் கலை,கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், சமூகசேவையாளர்கள், சாதனையாளர்களுக்கு நினைவுப் பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .