2020 நவம்பர் 28, சனிக்கிழமை

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அம்பாறை செங்கல் உற்பத்தியாளர்களுக்கு உலர் உணவு கையளிப்பு

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 06 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தொழில்களை இழந்த அம்பாறை மாவட்ட செங்கல் உற்பத்தியாளர்களுக்கு உலக உணவுத் திட்டத்தின் கீழ் உலர் உணவு வழங்கும் வழங்கும் நிகழ்வு, இன்று வியாழக்கிழமை சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளரும் உலக உணவுத்திட்டத்தின் மாவட்ட பொறுப்பதிகாரியுமான எஸ்.அன்வர்தீன், உலக உணவுத்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான வதிவிட பிரதிநிதி செனப் ஹெபிற், உலக உணவுத்திட்டத்தின் அம்பாறை மாவட்ட திட்ட அதிகாரி அஸ்வத், சம்மாந்துறை பிரதேசசெயலக உதவி திட்டமிடல்  பணிப்பாளர் கே.எல்.ஹம்சார், திட்ட உதவியாளர் எம்.ஐ.எம்.பஸீர், திட்ட இணைப்பாளர் ஐ.எல்.றாபியூ, தொழில்நுட்ப உத்தியோகத்தர் திருமதி சுஜாதா ஹேரத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இவ்வைபவத்தில் 900 செங்கல் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டு உலர் உணவுக்கான சிட்டைகளை அதிதிகளிடமிருந்து பெற்றுக்கொண்டனர். இதன்போது ஒருவருக்கு தலா 3,500 ரூபா பெறுமதியான அரிசி, சீனி, பருப்பு, தேங்காயெண்ணை போன்ற பொருட்கள் பட்டியலிடப்பட்டிருந்தன. அத்துடன் இதேயளவான பொருட்கள் இவர்களுக்கு மீண்டும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .