2020 நவம்பர் 28, சனிக்கிழமை

கல்முனை மாநகரசபை ஐ.ம.சு.கூ. வேட்பாளர் வீட்டில் கைக்குண்டு தாக்குதல்

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 12 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட கல்முனை  மாநகரசபை வேட்பாளர் ஒருவரின்  வீட்டில்  நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கைக்குண்டு தாக்குதல் இடம்பெற்றதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனை பாண்டிருப்பு  செல்லப்பர் வீதியிலுள்ள  ஜக்கிய மக்கள் சுதந்திர முன்ணனியின் கல்முனை  மாநகரசபை வேட்பாளர் கந்தையா விநாயகமூர்த்தி என்பவரது வீட்டின் மீதே இந்த கைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணியளவில் இந்த கைக்குண்டுத் தாக்குதல் இடம்பெற்றதாகவும் இதன்போது வீட்டின் யன்னல், கதவுகள் சிறிய சேதங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.  

இச்சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--