2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள்

Super User   / 2013 ஜனவரி 03 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட், எம்.ஜே.எம்.ஹனீபா)


வெள்ள அனர்த்தத்தினால் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட 96 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருட்களை இன்று வியாழக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேனவினால் வழங்கி வைத்தார். 

ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமூகசேவை பராமரிப்பு நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வின்போது உலர் உணர்வுப் பொருட்கள் கையளிக்கப்பட்டன.

இதன்போது, ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வாச்சிக்குடா மற்றும் முகத்துவாரம் ஆகிய தாழ்நில பகுதிகளைச் சேர்ந்த குடும்பத்தவர்களுக்கு 1,200 ரூபாய் பெறுமதியான அரிசி, சீனி, படுக்கை விரிப்புகள், நுளம்புதிரி மற்றும் தேயிலைத் தூள் போன்றவை வழங்கப்பட்டன.

டென்மார்க் அன்னை அறக்கட்டளை அமைப்பினர் வழங்கிய நிதியின் மூலம் பெறப்பட்ட மேற்படி நிவாரணப் பொருட்கள் 'பிரைட் ஃபியுச்ச நேரக்கரம்' அமைப்பினூடாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி. ஜெதீசன், திருக்கோவில் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ரி.விக்னேஷ்வரன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .