2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

கால்நடை மேய்க்கச் சென்ற குடும்பஸ்த்தரை காணவில்லை

Menaka Mookandi   / 2014 மார்ச் 28 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில், கஞ்சிகுடியாறு காட்டுப்பகுதிக்கு கால்நடைகளை மேய்ப்பதற்காகச் சென்ற குடும்பஸ்த்தரை கடந்த மூன்று நாட்களாக காணவில்லை என திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தம்பிலுவில் 02, ஆலையடி வீதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான பரநிருபசிங்கம் பாக்கியராசா (வயது 52) என்பவரே இவ்வாறு காணாமல் போய்யுள்ளார்.

இவர் கடந்த செவ்வாய்க்கிழமை (25) காலை கால்நடைகளை மேய்ப்பதற்காக கால்நடைகளை எடுத்துக்கொண்டு கஞ்சிகுடியாறு காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளதாகவும் பின்னர் மாலை வீடு திரும்பாத நிலையில் இவரின் உறவினர்கள் அப்பகுதிக்குச் தேடிச்சென்ற போது வேப்பையடிக் குளம் அருகில் அவருடைய பொருட்கள் என கருதப்படும் செருப்பு, வெற்றிலைப் பை மேலாடை (சேட்)  என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதனை அடுத்து இவர் குளத்தில் முழ்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கடற்படையினரின் உதவியுடன் திருக்கோவில் பொலிஸார் மற்றும் பொதுமக்கள், உறவினர்கள் காணாமல் போனவரை தொடர்ச்சியாக தேடி வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .