Sudharshini / 2015 ஓகஸ்ட் 01 , மு.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
குருநாகல் மாவட்ட ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ, வேடிக்கையான வாக்குறுதிகளை முன்வைத்துள்ளார் என ஜக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் அம்பாறை மாவட்ட முதன்மை வேட்பாளருமான தயாகமகே தெரிவித்தார்.
அம்பாறையில் வெள்ளிக்கிழமை (31)நடைபெற்ற மக்கள் கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பதிவுத்திருமணம் செய்வதற்கான கட்டணத்தை 5,000 ரூபாவாக அதிகரித்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம், 17ஆம் திகதிக்கு பின்னர், பதிவுத்திருமணம் செய்கின்றவர்களுக்கு இரண்டு இலட்சம் வழங்கப்போவதாக கூறியுள்ளமை நகைப்புக்குள்ளானதாகும்.
மேலும், இவ்வாறான பொய்யான வாக்குறுதிகளை வழங்குபவர்களை நம்பி மக்கள் ஏமாற்றம் அடையவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.
எவ்வாறாயினும் கட்சியாலும் தன்னாலும் வெளியிடப்பட்டுள்ள விஞ்ஞாபனத்திலுள்ள விடயங்கள் அனைத்தும், அமையப்போகின்ற ஜக்கிய தேசிய கட்சியின் ஆட்சியின் பின்னர்; நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்தார்.
7 minute ago
13 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
13 minute ago
2 hours ago