2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

மோட்டார் குண்டு மீட்பு

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 20 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொட்டைப் பிரதேசத்தில் பழைய மோட்டார் குண்டொன்றை மீட்டு செயலிழக்கச் செய்யப்பட்டதாக பொத்துவில் பொலிஸார்  வியாழக்கிழமை (20) தெரிவித்தனர்.

கடந்த எட்டு வருடங்களுக்கு முன்னர் ரொட்டைப் பிரதேசத்திலுள்ள நீர்ப்பாசன திணைக்களத்துக்குச்  சொந்தமான காணியில் விசேட அதிரடிப்படையினரின் முகாம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த முகாம் அகற்றப்பட்டதை அடுத்து இந்தக் காணி நீர்ப்;பாசன திணைக்களத்துக்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இந்தக் காணியை நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் புதன்கிழமை (19) மாலை துப்பரவு செய்து எல்லை இடும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது,  இந்த மோட்டார் குண்டு காணப்பட்டது.

இது தொடர்பில் பொத்துவில் பொலிஸாருக்கு நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் தகவல் வழங்கியதை தொடர்ந்து, அங்கு விரைந்த பொலிஸாரும் பொத்துவில் அறுகம்பை விசேட அதிரடிப்படையினரும் மோட்டார் குண்டை மீட்டதாகவும் பொலிஸார் கூறினர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .