Editorial / 2020 ஏப்ரல் 10 , பி.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எல்.எம்.ஷினாஸ்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனை, வழிகாட்டலுக்கமைய 6,000 வீட்டுத்தோட்ட விவசாயிகளை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.அபுல் கலீஸ் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கூறிய அவர், வீட்டுத் தோட்ட பயிர்ச்செய்கைக்கான விதைகள், கமநல சேவைகள் மத்திய நிலையத்தினூடாக ஓர் இரு தினங்களுக்குள் விநியோகிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவாகவும் தெரிவித்தார்.
மாவட்டச் செயலாளர் டி.எம்.எல்.பண்டாரநாயக்கவின் மேற்பார்வையின் கீழ், இந்த வேலைத்திட்டங்கள் மாவட்டத்தின் 20 பிரதேச செயலாளர் அலுவலகங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
'இலங்கையின் மொத்த அரிசு உற்பத்தியில், 25 சதவீதத்தை நான்கில் ஒரு பகுதியை அம்பாறை மாவட்ட உற்பத்தி பூர்த்தி செய்கிறது. இம்முறை சிறுபோகத்தில் 68ஆயிரம் ஹெக்டெயரில் நெற்பயிரச் செய்கையை காலம்முந்தி ஆரம்பித்திருக்கிறோம். ஏனெனில், மீண்டும் பெரும்போகத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் எங்களுக்கு இரண்டு அல்லது மூன்று மாதங்கள் இடைவெளி கிடைக்கும். இந்த இடைவெளி காலப்பகுதியில், பயறு, கௌபி, சோளம் போன்ற பயிர்ச்செய்கைகளை முன்னெடுப்பதற்கும் தீர்மானித்துள்ளோம்' என்றார்.
15 minute ago
43 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
43 minute ago
51 minute ago
1 hours ago