2020 மே 29, வெள்ளிக்கிழமை

பயனுற வாழ்தல்

Editorial   / 2019 மார்ச் 29 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்களுக்கு இயல்பாகவே கிரியேட்டிவிட்டி அதிகம். அதனைச் செயலுருப்படுத்தினால் அவர்கள் செல்லக்கூடிய தூரம் மதிப்பிட முடியாதது மட்டுமல்ல அதனால் அவர்கள் அடையக்கூடிய திருப்தியும் மகிழ்ச்சியும் எல்லையில்லாதது.

கண்டியில் இயங்கும் எல்லிஸ் டிரசர்ஸ் (Elle's Treasures) என்ற கூட்டுறவு அமைப்பானது பெண்களின் யோசனையிலிருந்து உயிர் பெற்றிருக்கிறது.

இவர்கள் அப்படி என்ன செய்து விட்டார்கள்தான் என்றா யோசிக்கிறீர்கள்? நம் அலுமாரிகளைத் திறந்து பார்த்தால் நமக்கே சிலபோது எரிச்சலாக இருக்கும். நாலு வருடங்களுக்கு முன்பு வாங்கி ஒரேயொரு முறை திருமண விழாவொன்றில் அணிந்துவிட்டு மடித்துவத்தை சேலை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும்.

ஒவ்வொரு முறை ஒவ்வொரு நிகழ்வு, பயணம் என்று வரும்போது அததற்கு ஏற்றபடியாக வாங்கி என்ன செய்வதென்றே தெரியாமல் அலுமாரியில் அடைத்துக் கொண்டிருப்போருக்கு ஒரு நற் செய்தியை எல்லிஸ் டிரசர்ஸ் அறிவித்தது. அதாவது நல்ல நிலையில் உள்ள பாவித்த உடைகள், சப்பாத்துக்கள், ஆபரணங்களை விற்பனை செய்வது தான்.

இதெல்லாம் முற்காலத்தில் நமக்கிடையே இருந்த வழக்கங்கள்தான். இவர்கள் இந்தக் காலத்திற்கு ஏற்றாற்போல புதுமைப்படுத்தி இதனை நடைமுறைப்படுத்துகிறார்கள்.

இதனால் நம் அலுமாரிகள், ட்ரெஸ்ஸிங் டேபிள்கள் சுத்தமாவது ஒன்று, ஒரு சிறு தொகைப் பணத்தைப் உபயோகப்படுத்த பொருள்களுக்கு பெற முடிவது இன்னொரு பயன். அத்தோடு இந்த வியாபரத்தில் கிடைக்கின்ற லாபத்தை வசதி குறைந்த மாணவர்களின் கல்விக்காவும், பெண்களுக்காவும் இவர்கள் செலவிடுகிறார்கள்.

நம் வீட்டில் உபயோகமேயில்லாத பொருள்களால் இத்தனை நன்மைகள் செய்ய முடியுமா என்றால், ஆம் முடிகிறதுதான். மீள் உற்பத்தி ( Recycle) போன்று மீள் பாவனை (Upcyle) கலாசாரமும் வேகமாக வளர்ந்து வருகிறது. பெண்கள் தங்கள் கிராமங்களில் ஊர்களில் முயற்சி செய்யக்கூடிய ஒரு நல்ல செயல்பாடு இது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X