2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

இலங்கை ஜனாதிபதிக்கு எதிர்ப்பு; டெல்லியில் வைகோ கைது

Editorial   / 2019 நவம்பர் 28 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இந்திய விஜயத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டு டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்திய வைகோ கைது செய்யப்பட்டார்.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  2 நாட்கள் விஜயம் மேற்கொண்டு இன்று (28) இந்தியா செல்லவுள்ள நிலையில், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் மதிமுக பொதுச்செயலாளரும் எம்பியுமான வைகோ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  பொறுப்பேற்றபோது, அவருக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர் மோடி, இந்தியா வருகை தருமாறு அழைப்பு விடுத்தார்.

மேலும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரும் இலங்கை சென்று  ஜனாதிபதியை சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவுக்கு வருகை தர முறைப்படி இலங்கை ஜனாதிபதிக்கு  அழைப்பு விடுத்தார் ஜெய்சங்கர்.

இதனை ஏற்று தாம் இந்தியா வருவதாக இலங்கை ஜனாதிபதி அறிவித்தார். ஆனால் அவரின்  இந்திய வருகைக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜந்தர் மந்தரில் வைகோ தலைமையில் மதிமுகவினர் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய வைகோ, இலங்கை ஜனாதிபதியை இந்தியா நம்பக் கூடாது; அவர் எப்போதும் சீனாவின் நண்பர்; இந்தியாவுக்கு நண்பராக இருக்கவே மாட்டார் என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

இதனையடுத்து, அவர் கைதுசெய்யப்பட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X