2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

குடியுரிமைச் சட்டம்; ஹைதராபாத்தில் பிரமாண்ட பேரணி

Editorial   / 2020 ஜனவரி 05 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹைதராபாத்

ஹைதராபாத்தில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நேற்று பிரமாண்ட பேரணியொன்று நடைபெற்றது.

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது.

இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள்,

பார்சிகள், ஜெயின் மதத்தினர், பௌத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

கடந்த 2014ஆம் ஆண்டு டிசெம்பர் 31ஆம் திகதிக்கு  முன்பாக வந்துள்ளவர்கள்  குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப் படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்தச் சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்தநிலையில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நேற்று பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

இதில் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தை மட்டுமல்லாமல், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு உள்ளிட்டவற்றை கைவிட வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .