Editorial / 2020 ஜனவரி 20 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடெல்லி,
மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இதில் சில மனுக்கள் எதிர்வரும் 22ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. இந் நிலை யில் இந்திய மாணவர் கூட்டமைப்பு (எஸ்.எப்.ஐ.) சார்பிலும் உச்ச நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அந்த மனுவில், குடியுரிமைத் திருத்தச் சட்டமானது இயற்கையிலேயே பாகுபாடு நிறைந்ததெனக் கூறியுள்ள அந்த அமைப்பினர், இது இந்திய அரசியல் சாசனத்தின் முக்கியமான கொள்கைகளுக்கு அழிவுகரமானது எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.
குறிப்பிட்ட சில மதப் பிரிவினர்களை வெளிப்படையாக ஆதரிக்கும் இந்தச் சட்டம், மற்ற மதத்தினரை நிராகரிக்கிறது எனவும், எனவே இந்த சட்டத்தை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மதத்தின் அடிப்படையில் இயற்றப்பட்டுள்ள இந்த சட்டம் அரசியல் சாசனத்தின் 14 வது பிரிவுக்கு முரணானது என்றும் அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.
9 hours ago
17 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
17 Nov 2025