Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Editorial / 2019 நவம்பர் 19 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அவரது ஆதரவாளர்களுக்கும், நடிகை காயத்ரி ரகுராம் இடையேயான மோதல் முற்றி வருகிறது. இதுதொடர்பாக நேரில் வந்து என்னை மிரட்டிப் பாருங்கள் என்று காயத்ரி ரகுராம் நேரடி சவால் விடுத்துள்ளார்.
நிறைய அசிங்கமான பொம்மை இருந்தால் அது இந்து கோயில் என்று அண்மையில் இந்திய நாடாளுமன்றத்தின் கீழ்ச்சபை உறுப்பினரான திருமாவளவன் பேசியிருந்தார். இக்கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரின் கருத்துக்கு இந்துக்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, ‛‛நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல, நான் கூறியதை திரித்து கூறி எனக்கு எதிராக அவதூறு பரப்புகிறார்கள்'' என திருமாவளவன் கூறியிருந்தார்.
இது தொடர்பாக, பாரதிய ஜனதாக் கட்சியைச் சேர்ந்தவருமான காயத்ரி ரகுராமும், திருமாவளவனை டுவிட்டரில் விமர்சித்தார். குறிப்பாக திருமாவளவன் பேசிய சர்ச்சை காணொளியை பதிவிட்டு, இந்த நபரை எங்கு கண்டாலும் இந்துக்கள் செருப்பால் அடிக்கணும் என்பது போல் இமோஜி பதிவிட்டார். அதோடு அவரின் விளக்கத்திற்கு, ‛‛நடிப்பு பத்தல'' எனவும் கூறியிருந்தார்.
இதனால் திருமாவளவன் ஆதரவாளர்கள், காயத்ரி ரகுராமை அலைபேசியில் தொடர்பு கொண்டு கண்டிக்கத் தொடங்கினர். சிலர் அநாகரிக கருத்துக்களையும் கூறினர். இவை எல்லாவற்றுக்கும் அவரும் பதில் தந்ததோடு, இதை அனைத்தையும் டுவிட்டரில் நேரலையாகப் பதிவிட்டார்.
இதற்கிடையே காயத்ரி ரகுராமின் வீட்டை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் அவர்களைக் கைது செய்தனர்.
‛‛திருமாவளவனால் என்னை நேரடியாக எதிர்கொள்ள முடியவில்லை, எனவே, இந்துக்கள் அனைவரும் அவருக்கு சேலையை அனுப்பி வையுங்கள். இல்லை... இல்லை... மடிசார் புடவை அனுப்புங்கள்'' என டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார். அதோடு திருமாவளவனுக்கு சவாலும் விடுத்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago