Editorial / 2020 ஜனவரி 12 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழகம்
சென்னைப் பத்திரிகையாளர் சங்கத் தலைவரும், மூத்த பத்திரிகையாளருமான வி.அன்பழகன் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதையடுத்து டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டனத்தில் கூறியிருப்பதாவது:
சென்னை பத்திரிகையாளர் சங்க தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான அன்பழகன் இன்று அதிகாலை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது என்றும் தெரிவித்துள்ளார். .
சென்னை புத்தகக் கண்காட்சியில் அவருக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்ட புத்தகங்களில், ஆளுங்கட்சிக்கு எதிரான கருத்துடைய புத்தகங்கள் இருந்ததால் தான் இந்த கைதுக்கான பின்னணி எனச் சொல்லப்படும் செய்திகள் மிகுந்த கவலையளிக்கின்றன.
கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் இதுபோன்ற செயல்களைத் தமிழக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
கைது செய்யப்பட்ட அன்பழகனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், என்று கூறியுள்ளார்.
8 minute ago
12 minute ago
15 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
12 minute ago
15 minute ago