2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

‘பொலிஸார் சிறப்பாக செயற்பட்டனர்’

Editorial   / 2020 மார்ச் 12 , பி.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கெதிராக டெல்லியில் அண்மையில்

நடந்த போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் குறித்தும், அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் நேற்று நாடாளுமன்ற கீழ்ச்சபையில்

சட்டப்பிரிவு, 193-இன் கீழ் நடந்த விவாதத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷா,

டெல்லி வன்முறைச் சம்பவங்களை 36 மணிநேரத்தில் பொலிஸார் கட்டுப்படுத்தினர்

என்று குறிப்பிட்டதுடன் கடந்த மாதம் 25ஆம் திகதிக்கு பிறகு எக்கலவரமும் நடக்க

வில்லை என்று தான் பதிவு செய்வதாகவும்,  நடந்த வன்முறைச் சம்பவங்களை அரசியலாக்க முயற்சிகள் நடைபெற்றன என்று தெரிவித்துள்ளார்.

வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றபோது ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் இந்திய வருகை மற்றும் சந்திப்புகள் நிகழ்ந்தது பற்றி

குறிப்பிட்ட அமித் ஷா, “ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதியின் பயணத் திட்டம் முன்னரே திட்டமிடப்பட்ட ஒன்று. எனது தொகுதியில் நடந்த நிகழ்வுகள் மற்றும் நான்

அதில் கலந்துகொண்டதும் முன்னரே திட்டமிடப்பட்ட ஒன்று. அதேவேளையில், அடுத்த நாள் டெல்லிக்கு ஜனாதிபதி ட்ரம்ப் வந்தபோது, நான் எந்த நிகழ்ச்சியிலும்

கலந்துகொள்ளவில்லை. நாள் முழுவதும் பொலிஸாருடன் தான் நான் இருந்தேன். வன்முறை நடந்த பகுதிகளுக்கு செல்லுமாறு தேசிய பாதுகாப்பு படையினரை நான் கேட்டுக்கொண்டேன்’’ என்று கூறினார்.  

“நடந்த வன்முறை தொடர்பாக டெல்லி பொலிஸார் என்ன செய்து கொண்டிருந்தனர்

என்று பல கேள்விகள் கேட்கப்படுகின்றன. வன்முறை நடைபெற்றபோது களத்தில் பொலிஸார் செயலாற்றிக் கொண்டிருந்தனர். இந்த வன்முறை குறித்து விசாரணை

மேற்கொண்டு வரும் நாள்களில் விசாரணை அறிக்கையொன்றை அவர்கள் சமர்ப்பிப்பார்கள். மற்ற பகுதிகளுக்கு கலவரம் பரவாமல் தடுத்த, சிறப்பாகச்

செயற்பட்ட டெல்லி பொலிஸாரை நான் பாராட்டுகிறேன்’’ என்று அமித் ஷா மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .