Editorial / 2019 நவம்பர் 24 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் மகாராஷ்ரா ஆளுநர் பகத் சிங் கொஷ்யரிக்கு பாரதிய ஜனதாக் கட்சி (பா.ஜ.க), தேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டசபை உறுப்பினர் அஜித் பவார் சமர்ப்பித்த கடிதத்தையும், ஆட்சி அமைக்க அழைத்த பகத் சிங் கொஷ்யரின் கடிதத்தையும் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்ராவில் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சி அமைக்க பகத் சிங் கொஷ்யரி அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஷிவ் சேனா, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இவ்வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீ திமன்றத்தில் இன்று தொடங்கியது. நீதியரசர்கள் ரமணா, அசோஹ் பூஷண், சஞ்ஜீவ் கண்ணா ஆகிய மூன்று பேர் கொண்ட அமர்வில் விசாரணை தொடங்கியது.
இந்த வழக்கு விசாரணையில் பகத் சிங் கொஷ்யரியின் செயற்பாடு ஒருதலைபட்சமாக உள்ளது. பெரும்பான்மை இருந்தால் பா.ஜ.க சட்டசபையில் நிரூபிக்கட்டும். தேர்தலுக்கு முந்தைய கூட்டணி உடைந்துவிட்டது. அமைச்சரவை பரிந்துரை இல்லாமல் குடியரசுத்தலைவர் ஆட்சி இரத்துச் செய்யப்பட்டுள்ளது என்று ஷிவ் சேனா தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார்.
அதேவேளையில், மகாராஷ்ராவில் ஆட்சி அமைந்துவிட்டது. எனவே இந்த மனுவை விசாரிக்கக் கூடாது என்று பா.ஜ.க தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். தவிர, பா.ஜ.க தரப்பு “முதலில் சட்டசபைத் தலைவரை நியமனம் செய்ய வேண்டும் என்றும் சபாநாயகரை நியமித்த பிறகே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனக் கூறியதுடன், மனு தாக்கல் செய்ய போதிய அவகாசம் தந்திருக்க வேண்டும்” எனக் கூறியது.
இதையடுத்து, இந்த மனு மீதான விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம், பா.ஜ.க ஆட்சியமைக்க பகத் சிங் கொஷ்யரி அழைப்பு விடுத்த கடிதத்தையும், முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அளித்த ஆதரவு கடிதத்தையும் நாளை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago