2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

11ஆம் ஆண்டு மாணவி கூட்டு வன்புணர்வு; நால்வர் கைது

Editorial   / 2019 டிசெம்பர் 01 , பி.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

நண்பனுடன் பூங்காவில் பிறந்தநாள் கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய 11ஆம் ஆண்டு மாணவியை ஆறு பேர் வன்புணர்வு செய்த சம்பவம் இந்தியாவின் தமிழ்நாட்டின் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனது நண்பரின் பிறந்த நாளை கடந்த செவ்ய்யாக்கிழமை கொண்டாடிய பின்னர் அவருடன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்துள்ளார். அப்போது இவர்களை வழிமறித்த ஆறு பேர் கொண்ட கும்பல் இரண்டு பேரையும் மிரட்டி ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து மாணவியின் நண்பரை மிரட்டி, ஆடைகளை கழற்றி நிர்வாணப்படுத்தி அலைபேசியில் பதிவு செய்துள்ளனர். பின்னர் அவரை தாக்கினர், இதில் அவர் மயங்கியுள்ளார்.

பின்னர் அந்த கும்பல் மாணவியை மிரட்டி நிர்வாணமாக்கி அங்குள்ள மறைவிடத்துக்கு தூக்கி சென்று கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர். இதனை அலைபேசியில் பதிவு செய்துள்ளனர். மேலும் நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால் சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவதாக மிரட்டி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.

மறுநாள் மாலை வீட்டுக்கு திரும்பிய மாணவி நடந்த சம்பவத்தை தனது தாயிடம் கூறியுள்ளார். பின்னர் இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளனர். மாணவியை வன்புணர்வு செய்த ஆறு பேர் மீது போக்சோ சட்டம், பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பொலிஸார் தேடி வந்தனர்.

இந்நிலையில், வன்புணர்வில் ஈடுபட்ட நான்கு பேரை பொலிஸ் பொறுப்பதிகாரி பிரபா தேவி தலைமையிலான பொலிஸார் நேற்று  கைது செய்தனர். பின்னர் நான்கு பேரையும் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மணிகண்டன் உள்பட 2 பேரை தனிப்படை அமைத்து பொலிஸார் தேடி வருகிறார்கள்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .