Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
A.K.M. Ramzy / 2021 ஜனவரி 17 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்தரப் பிரதேசம்;
அல் குர்ஆன் படிப்பதை முஸ்லிம்கள் நிறுத்தவேண்டுமென சங்கராச்சார்யா பரிஷத் எனும் அமைப்பின் தலைவரான சுவாமி ஆனந்த் ஸ்வரூப் கூறியது சர்ச்சையை கிப்பியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் மீரட்டில் மாநில அரசின் சவுத்ரி சரண்சிங் பல்கலைக்கழகத்தில் ஐந்து நாள்களுக்கு முன், சங்கராச்சார்யா பரிஷத் எனும் அமைப்பின் தலைவரான சுவாமி ஆனந்த் ஸ்வரூப் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றுள்ளது.
'இந்து பஞ்சாயத்து’ எனப் பெயரிடப்பட்ட அக்கூட்டத்தில் ஏராளமான வலதுசாரி சிந்தனையாளர்கள் கலந்து கொண்டனர்.
வீடியோ பதிவில் ஆனந்த் ஸ்வரூப் பேசுகையில்; "முஸ்லிம்களுக்கு நான் கூறிக்கொள்வது என்னவென்றால், எங்களுடன் நீங்கள் இணைந்திருக்க வேண்டும். முதலில் அனைவரும் அல் குர்ஆன் படிப்பதை நிறுத்த வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
"இதற்காக முஸ்லிம்களின் கடைகளில் எதையும் வாங்கக் கூடாது என இந்துக்கள் முடிவெடுக்க வேண்டும். இதுபோல், சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முஸ்லிம்களைப் புறக்கணிக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தம் இஸ்லாத்தை விட்டு இந்து மதத்துக்கு மாறுவார்கள்" எனத் தெரிவிக்கிறார்.
இதுபோல், சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது சுவாமி ஆனந்த் ஸ்வரூப்புக்கு முதன்முறையல்ல. இவர் கொல்கத்தாவின் ஒரு நிகழ்ச்சியில், இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மீரட்டின் வீடியோ பதிவுகளைஉத்தரப் பிரதேச சைபர் குற்றப் பிரிவுக்கு மீரட் பொலிஸார் விசாரணைக்கு அனுப்பியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
2 hours ago