2020 மே 28, வியாழக்கிழமை

ஆம்பன் சூறாவளியால் 22 பேர் பலி

Editorial   / 2020 மே 21 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியா, பங்களாதேஷில் நேற்றுத்  தாக்கிய ஆம்பன் சூறாவளியால் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கரையோரப் பகுதிகளை கடும் காற்று, மழையுடன் தாக்கிய ஆம்பன் சூறாவளியானது தற்போது வலுவிழந்து பூட்டானை நோக்கி வடக்காக நகர்ந்துள்ளது.

கிழக்கிந்திய நகரான கொல்கத்தாவே ஆம்பன் சூறாவளியால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கான மரங்கள் புடுங்கி எறியப்பட்டுள்ளதுடன், மின் மற்றும் தொலைபேசி விநியோக மார்க்கங்கள் வீழ்ந்துள்ளதுடன் வீடுகள் தரைமட்டமாகியுள்ளன.

கொல்கத்தாவின் பல வீதிகள் வெள்ளமாகக் காணப்படுவதுடன், அங்கு 14 மில்லியன் பேரில் பெரும்பாலானோர் மின்னில்லாமல் காணப்படுகின்றனர்.

பங்களாதேஷில் குறைந்தது 10 இறப்புகளும், இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் 12 பேரின் உயிரிழப்புகளும் இதுவரையில் அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், கொல்கத்தாவில் அழிவானது கொவிட்-19-ஐ விட மோசமானது என மேற்கு வங்காள முதலமைச்சர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மணிக்கு 185 கிலோ மீற்றர் வேகம் வரையான காற்று தாக்கியதில் மேற்கு பெங்காலின், ஒடிஷாவின் பகுதிகளைத் தாக்கியிருந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X