Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 பெப்ரவரி 12 , பி.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
டெல்லி
டெல்லியில் ஆம் ஆத்மி வெற்றி ஊர்வலத்தில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அக்கட்சியின் தொண்டர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மற்றுமொரு தொண்டர் காயமடைந்தாக தெரிவிக்கப்ப டுகிறது.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 70 தொகுதிகளில் 62 தொகுதிகளைக் கைப்பற்றி
ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. கேஜ்ரிவால் மீண்டும் முதல்வராகிறார்.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் மெஹ்ராலி தொகுதி எம்.எல்.ஏ., நரேஷ் குப்தா கோவிலுக்குச் சென்றுவிட்டு ஊர்வலமாக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டே திறந்தவாகனத்தில் திரும்பியபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இதில் நல்வாய்ப்பாக நரேஷ் யாதவ் உயிர்பிழைத்தார். ஆனால், அவரது பின்னால் நின்றுகொண்டிருந்த அசோக் மான் என்ற ஆம் ஆத்மி தொண்டர் பரிதாபமாக பலியானார்.
துப்பாக்கிச் சூடு சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கமராக்களில் பதிவான நிலையில், குண்டு பாயும் நொடிவரை அசோக் மான் புன்னகையுடன் மக்களுக்கு வெற்றிச்
சின்னத்தைக் காட்டி உற்சாகமாக பயணிப்பது தெரிகிறது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
இவர்களில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அசோக் மானையும் அவரது உறவினர் ஹரீந்தரையும் கொலை செய்யும் நோக்கிலேயே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக ஒப்புக்கொண்டார்.
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,வை குறிவைத்துத் துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை என்றும் அந்த சந்தேக நபர் தெரிவித்தார்.
நான் இறந்துவிடுவேன் என்றே அஞ்சினேன்..
இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு எம்.எல்.ஏ. நரேஷ் யாதவ் அளித்த
பேட்டியில், "துப்பாக்கிச் சூடு சம்பவம் சரியாக இரவு 10,30 மணிக்கு இடம்பெற்றது. சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் பொலிஸார் தெளிவாக ஆராய்ந்து
குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம். இந்த தாக்குதலுக்குப் பின்னால் உள்ள காரணம் எனக்குத் தெரியாது.
ஆனால், அடுத்தடுத்து 4 குண்டுகள் நான் நின்ற வாகனத்தை நோக்கிப் பாய்ந்தபோது நான் இறந்துவிடுவேன் என்றே நினைத்தேன்" என்றார்.
8 hours ago
15 Oct 2025
15 Oct 2025
15 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
15 Oct 2025
15 Oct 2025
15 Oct 2025