2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

‘இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தொடர்வார்’

Editorial   / 2020 ஓகஸ்ட் 10 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக இந்திய நாடாளுமன்றத்தின் கீழ்ச்சபை உறுப்பினரான சோனியா காந்தி தொடர்வார் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரான இந்திய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினரான அபிஷேக் சிங்வி நேற்று  தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற கீழ்ச்சபைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்ததற்கு பொறுப்பேற்று அக்கட்சியின் தலைவர் பதவியை இந்திய நாடாளுமன்றத்தின் கீழவை உறுப்பினரான ராகுல் காந்தி இராஜினாமா செய்தார்.

இதையடுத்து காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக கடந்தாண்டு ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி சோனியா காந்தி பொறுப்பேற்றார்.

இந்நிலையில், சோனியா காந்தியின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைவதையடுத்து காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவாரா அல்லது இடைக்காலத் தலைவரின் பதவிக்காலம் காலவரையின்றி நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

அந்தவகையில் இது தொடர்பாக காணொளி முறையில் நடைபெற்ற செய்தியாளர்கள் மாநாட்டின்போது, “சோனியா காந்தியின் இடைக்காலத் தலைவர் பதவிக்காலம் திங்கட்கிழமையுடன் நிறைவடைவது உண்மையே. எனினும் கட்சியின் தலைவர் பதவியிடம் காலியாவதாக அர்த்தமல்ல.

சோனியா காந்திதான் காங்கிரஸின் தலைவர். புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு சரியான வழிமுறைகள் செயற்படுத்தப்பட வேண்டும். அந்தப் பணிகள் விரைவில் முடிவடையும். அதுவரை காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தொடர்வார்” என அபிஷேக் சிங்வி தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--