A.K.M. Ramzy / 2021 ஏப்ரல் 08 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடெல்லி
பிரதமர் நரேந்திர மோடி, இன்று காலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி இரண்டாவது போட்டுக்கொண்டார்.
37 நாட்களுக்குப் பின்னர் இன்று அவர் இரண்டாவது தடுப்பூசியையும் பெற்றுக் கொண்டுள்ளார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
முதல் தவணை தடுப்பூசி செலுத்திய புதுச்சேரியைச் சேர்ந்த செவிலி நிவேதா அவருடைய கைகளைப் பிடித்துக் கொள்ள செவிலி நிஷா சர்மா இரண்டாவது தடுப்பூசியை செலுத்தினார். இவர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
தடுப்பூசி செலுத்தியது குறித்து, நிஷா சர்மா, 'நான் தான் பிரதமருக்கு இன்று இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்தினேன். இது என் வாழ்வில் மறக்க முடியாத தருணம் என்று கூறினார். நிஷா பஞ்சாப் மாநிலம் சங்க்ரூரைச் சேர்ந்தவர்.
முதல் தவணை தடுப்பூசி செலுத்திய நிவேதா, நான் இன்று பிரதமரை சந்திக்க இன்னொரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பிரதமரை சந்தித்ததிலும் அவருக்கு இரண்டாவது தடுப்பூசி செலுத்த உதவியதிலும் எனக்குப் பெருமகிழ்ச்சி.
பிரதமர் எங்களிடம் நலம் விசாரித்தார். நாங்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டோம் என்று அவர் கூறினார். நிவேதா புதுச்சேரியைச் சேர்ந்தவர். பிரதமர் மோடி உள்நாட்டுத் தயாரிப்பான கோவேக்சின் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
11 minute ago
33 minute ago
49 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
33 minute ago
49 minute ago
4 hours ago