Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.K.M. Ramzy / 2020 ஜூன் 30 , பி.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் பரவி வருவதால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ஆம் திகதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் இது பல்வேறு கட்டங்களாக
நீட்டிக்கப்பட்டது. இவ்வாறு நீட்டிக்கப்பட்டபோது பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வந்தார்.
தற்போது நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. இதில் 2ஆம் கட்ட தளர்வுகள் நாளை (புதன்கிழமை) அமலுக்கு வருகின்றன.
இந்நிலையில் பிரதமர் மோடி இன்று மாலை 4 மணி அளவில் நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “பொதுமுடக்கத்தின் 2ஆம் கட்டமான UNLOCK 2.0 தொடங்கிவிட்டது. கொரோனாவை எதிர்த்து போராடும் சூழலில் பருவ
மழைக்காலம் தொடங்கிவிட்டது. இந்த காலத்தில் காய்ச்சல், சளி உள்ளிட்டவை வரும் என்பதால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். பொது முடக்கத்தை பல இடங்களில் சரியாக பின்பற்றவில்லை.
இப்போது செய்யக்கூடிய சிறிய தவறுகள் மிகப்பெரிய விலையைக் கொடுக்க நேரிடலாம்.
சரியான நேரத்தில் கொண்டுவரப்பட்ட முழு முடக்கத்தால் இலட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
நாட்டில் ஏழை மக்கள் யாரும் பசியால் வாடக்கூடாது. பிற நாடுகளுடம் ஒப்பிடும் போது நமது நாடு கொரோனாவை சிறப்பாக எதிர் கொண்டுள்ளது.
20 கோடி பேருக்கு ஜன் தன் வங்கி கணக்கின் பயன் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நலத் திட்டங்களால் அமெரிக்காவை விட 2 மடங்கு அதிக மக்கள் பலன் அடைந்துள்ளனர்.
தீபாவளி, சத் பூஜா என நவம்பர் வரை 80 கோடி பேருக்கு இலவச ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டம் நீட்டிக்கப்படும்.
பிரதமரின் கரீப் கல்யான் அன்னயோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ளன. ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் ஏழை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பயனளித்து வருகிறது.
வரி செலுத்துவோர் உரிய நேரத்தில் வரியை செலுத்துவதால்தான், ஏழைகள் பசியின்றி வாழ முடிகிறது. தற்சார்பு பாரதத் திட்டத்தைச் செயல்படுத்தவும், பொருளாதார
வளர்ச்சியை ஏற்படுத்தவும் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருள்களை வாங்குவோம்
பிரதமர் முதல் சாமனியர் வரை நமது நாட்டில் ஒரே விதி முறைதான். இந்தியா முழுவதும் 80 கோடி ஏழை மக்களுக்கு 5 கிலோ கோதுமை வழங்கப்பட்டுள்ளது. 18
ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 80 கோடி மக்களுக்கு இலவச ரேசன் பொருள்கள் வழங்கும் திட்டம் மேலும் 5 மாதங்களுக்கு
நீட்டிக்கப்பட்டும். அரிசி கோதுமை யுடன் ஒரு கிலோ பருப்பும் இலவசமாக
வழங்கப்படும். இலவச பொருள்களுக்காக அரசுக்கு கூடுதலாக 90 ஆயிரம் கோடி
செலவாகும். நாட்டின் பொருளாதார சூழலை மேம்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
மேலும் “கிராமப் புறங்களில், வளர்ச்சியை ஏற்படுத்த ரூ,50,000 கோடி செலவில் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றோம். புலம்பெயர்ந்த
தொழிலாளர்களுக்காக கல்யாண் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஊரடங்கின்போது விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும்.
ஊராட்சி தலைவரோ, பிரதமரோ விதிமுறைகளை கடைப்பிடித்தாக வேண்டும்.
வேளாண் துறையிலும் வளர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.
5 hours ago
15 Sep 2025
15 Sep 2025
15 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
15 Sep 2025
15 Sep 2025
15 Sep 2025