A.K.M. Ramzy / 2021 ஜனவரி 17 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மதுரை:
பொங்கல் திருநாளையொட்டி மதுரை மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருவது வழக்கம். அவனியாபுரத்திலும் பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன.
இதில் ஜல்லிக்கட்டின் போது காளையை போட்டிக்கு அழைத்து சென்றபோது மாடு குத்தி படுகாயமடைந்த நவமணி என்ற வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதக்போது, ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி தள்ளியதில் வீரர்கள், பார்வையாளர்கள் என 48 பேர் காயம் அடைந்தனர். மேலும் படுகாயமடைந்த
14 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் போட்டி நேற்று நடந்தேறியமை குறிப்பிடத்தக்கது.
8 hours ago
26 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
26 Oct 2025