Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.K.M. Ramzy / 2021 ஜனவரி 14 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மதுரை:
பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருவதுவழக்கம். அதில், முதல் ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையான இன்று அவனியாபுரத்தில் வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது.
போட்டியை பார்க்க ராகுல்காந்தி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் அவர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் அவனியாபுரம் பகுதிக்கு வந்தார்.
ஜல்லிக்கட்டு போட்டியை ராகுல்காந்தி நேரில் பார்த்து ரசித்தார். அவருடன் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அருகில் இருந்து போட்டியை பார்த்தார். இருவரும் சிறிது நேரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக பேசிக்கொண்டனர்.
ராகுல் காந்தியுடன் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகளும் ஜல்லிக்கட்டை பார்த்து ரசித்தனர்.
ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்த ராகுல் காந்தி எம்பி மேடையில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது,
தமிழக மக்களுக்கு வணக்கம். ஜல்லிக்கட்டில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ் கலாசாரம் , பாரம்பரியம் இன்றியமையாதது. அது மதிக்கப்பட வேண்டும். தமிழக மக்களுடன் நின்று அவர்களின் வரலாற்றை பாரம்பரியத்தை காக்க வேண்டியது என் கடமை. உங்களது உணர்வுகளையும், கலாசாரத்தையும், ரசித்து பாராட்டவே வந்துள்ளேன். ஜல்லிக்கட்டை கண்டு ரசித்த ராகுல் காந்தி சுமார் 30 நிமிடங்களுக்கு பிறகு புறப்பட்டு சென்றார்.
5 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
33 minute ago