Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 10 , பி.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
கெளதம புத்தமரின் பிறப்பிடம் தொடர்பான சர்ச்சையை இந்தியா நிராகரித்துள்ளது.
கெளதம புத்தரைப் பற்றிய இந்திய வெளிநாட்டமைச்சர் எஸ். ஜெய்ஷங்கரின் கருத்துகளானவை தங்களது பகரப்பட்ட பெளத்த பராம்பரியத்தைப் பற்றியது எனத் தெரிவித்துள்ள இந்தியா, நேபாளத்தின் லும்பினியில், பெளத்தத்தைக் கண்டுபிடித்த கெளதம புத்தர் பிறந்தார் என்பதில் எதுவிதச் சந்தேகமுமில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவின் தார்மீகத் தலைமைத்துவம், கெளதம புத்தர் மற்றும் மகாத்மா காந்தியின் போதனைகள் இன்னும் எவ்வாறு பொருந்தக்கூடியனவாக உள்ளது என்பது குறித்து கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இணையவழி செயலமர்வொன்றில் ஜெய்ஷங்கர் குறிப்பிட்டிருந்தார்.
எவ்வாறெனினும், புத்தர் ஒரு இந்தியர் என ஜெய்ஷங்கர் தெரிவித்ததாக நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்நிலையில், இதற்கு எதிராக நேபாள வெளிநாட்டமைச்சு எதிர்ப்பையும் பதிவு செய்திருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
2 hours ago