2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு

A.K.M. Ramzy   / 2021 ஜனவரி 16 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகப் புகழ் பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிநேற்று மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது.கொரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று முடிந்தது. 

  ஜல்லுக்கட்டு போட்டி அதிக அளவிலான காளைகள் இருந்ததால் ஒரு மணி நேரம் நீடிக்கப்பட்டது. பின்னர் மாலை நேரம் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது.பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 18 காளைகளை அடக்கி சிறந்த வீரராக கார்த்திக் என்ற இளைஞர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.ஜல்லிக்கட்டில் 17 காளைகளை அடக்கிய பொதும்பு கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் என்ற இளைஞர் 2ஆம் இடம் பிடித்துள்ளார்.

10 காளைகளை அடக்கி மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் 3ஆம் இடத்தை பிடித்துள்ளார்.   பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 783 காளைகள், 651 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர்.

இதில் மாடுபிடி வீரர்கள் 19 பேர் உட்பட, மாட்டின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என 33 பேர் காயமடைந்தனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .