A.K.M. Ramzy / 2020 ஜூன் 29 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
மும்பை,
ஆட்கொல்லி கொரோனா வைரஸ் மராட்டியத்தை புரட்டி போட்டு உள்ளது. இங்கு நோய் பாதிப்பு அசுர வேகத்தில் பரவி வருகிறது.
மராட்டியத்தில் கொரோனா ஊரடங்கு பாதுகாப்பு பணியில் இருந்துவரும் பொலிஸ்காரர்களும் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 77 பொலிஸார் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,743 ஆக உயர்ந்துள்ளது.
இந்த ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது.
மாநிலத்தில் இதுவரை 1,030 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago