A.K.M. Ramzy / 2021 ஜனவரி 18 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை
ரஜினி ரசிகர்கள் தான் விரும்பிய கட்சியில் இணைந்து செயல்படலாம், அதற்கு முன் மன்றத்திலிருந்து தனது பொறுப்புகளை இராஜினாமா செய்துவிடவேண்டும் என ரஜினி மக்கள் மன்ற மாநில நிர்வாகி சுதாகர் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் இரசிக்கப்படுபவர். ஏராளமான ரசிகர்கள் அவரது மக்கள் மன்றத்தில் உள்ளனர். தமிழகம் முழுவதும், உலக நாடுகளிலும் ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பின் மூலம் ரசிகர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து அவர் அரசியலில் வரவில்லை என்பதை உறுதியாக கடந்த ஜனவரி 11ஆம் திகதி அன்று தெரிவித்தார். இந்நிலையில் ஆங்காங்கே ரஜினி மக்கள் மன்றத்தினர் அரசியல் கட்சிகளோடு இணைந்து செயல்படும் முடிவை எடுத்தனர். இதிலும் குழப்பம் நீடித்தது. அதை தீர்க்கும் விதமாக ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில நிர்வாகி சுதாகர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago