Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
A.K.M. Ramzy / 2021 ஜனவரி 16 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
விவசாயிகளின் வலிமை பிரதமர் மோடிக்கோ அல்லது அவரது அரசுக்கோ தெரியாது. விவசாயிகள் மீது மோடிக்கு துளிகூட அக்கறை இல்லை. புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரித்து போராடிவரும் விவசாயிகள் சோர்வடைந்து விடுவார்கள் என்றே அவர் எண்ணுகிறார் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
மத்திய அரசு கொண்டுவந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லி எல்லையில் கடந்த 52 நாள்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும் டில்லி ஜந்தர் மந்தரில் பஞ்சாப்பைச் சேர்ந்த காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மற்றோரு பக்கம் டில்லி பிரதேச காங்கிரஸ் கட்சி தலைவர்களும், தொண்டர்களும் டில்லி துணை நிலை ஆளுநர் இல்லம் (ராஜ் நிவாஸ்) அருகேயும் நேற்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இந்த இரு நிகழ்வுகளிலும் காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தியும் அவரது சகோதரியும் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டனர்.
இதன்போது ராகுல் காந்தி பேசுகையில்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் தலைவர்களுடன் மத்திய அரசு 9 சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. இது போராட்ட த்தை திசைத் திருப்பும் தந்திரங்களில் ஒன்றாகும். தொடர் போராட்டம் நடத்தும் விவசாயிகள் சோர்வடைந்து சென்று விடுவார்கள் என்று பிரதமர் மோடி நினைக்கிறார்.
அப்படி அவர் நினைத்தால் அது தவறானதாகும். ஆனால், வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை விவசாயிகள் தங்கள் நிலையிலிருந்து இறங்கி வரமாட்டார்கள். பிரதமர் நரேந்திர மோடிக்கு விவசாயிகள் மீது அக்கறை இல்லை. 100 விவசாயிகள் உயிர்துறந்த போதிலும் அவர்களைப் பற்றி கவலையில்லை. தன் கையில் அதிகாரம் இருப்பதாக மட்டும் அவர் கருதுகிறார்.
இந்த அரசுக்கு விவசாயிகளின் வலிமை தெரியாது. பிரதமர் மோடிக்கு இது புரியவில்லை. இதை அவர் புரிந்து கொண்டிருந்தால், இந்த நேரம்அரசு இந்த புதிய சட்டங்களை திரும்பப் பெற்றிருக்கும் என்றார் மோடி.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
38 minute ago
9 hours ago
03 Jul 2025