A.K.M. Ramzy / 2020 செப்டெம்பர் 16 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.
மத்திய, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில்,
எனது கொரோனா பரிசோதனை முடிவுகள் இன்று காலை வெளியானது.
அதில் எனக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளேன்.
நான் விரைவில் குணமடைய வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் எனப் பதிவிட்டுள்ளார்.
11 minute ago
58 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
58 minute ago
8 hours ago