2020 நவம்பர் 28, சனிக்கிழமை

இன்றைய பலன்கள் (09.12.2013)

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 08 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}இன்றைய பலன்கள் (09.12.2013)
 
மேடம்
உணவு மற்றும் ஆரோக்கிய விடயத்தில் கவனம் தேவை. குடும்பத்து பெரியவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்வது நல்லது. பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். 
அஸ்வினி : துன்பம் 
பரணி : கஷ்டம்
கிருத்திகை 1ஆம் பாதம்: மகிழ்ச்சி
 
 
இடபம்
வெளிநாட்டில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். பணத்தட்டுப்பாடுகள் காணப்படும், இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். முயற்சியின் மூலம் மட்டுமே வெற்றியை அடையலாம்.
கிருத்திகை 2, 3, 4: மகிழ்ச்சி 
ரோகிணி : இன்பம் 
மிருகசீரிடம் 1, 2: வெற்றி 
 
 
மிதுனம் 
தங்களது திட்டங்களை எதிர்பாராது மாற்றி அமைக்க வேண்டி இருக்கும். அலுவலக பணிகளில் சிலரின் கோபங்களுக்கு ஆளாக நேரிடும். பணியில் தொழில் நுட்பங்களை தெரிந்து கொள்வதற்காக அலைச்சல்கள் பட வேண்டி இருக்கும். 
மிருகசீரிடம் 2, 3: துக்கம் 
திருவாதிரை: துன்பம் 
புனர்பூசம்: குழப்பம் 
 
 
கடகம்
வியாபாரத்தில் புதிய உக்திகளை செலுத்தி வெற்றி காண்பீர்கள். சக ஊழியர்களிடம் மதிப்பைப் பெறுவீர்கள். மங்கல நிகழ்ச்சிகள் நடத்துவதில் உறவினர்களின் ஒத்துழைப்புக்கள் கிடைக்கப்பெறுவீர்கள். 
புனர்பூசம்: மகிழ்ச்சி
பூசம் : தனலாபம்
ஆயில்யம்: மகிழ்ச்சி
 
 
சிம்மம்
மாற்றுத் தொழிலில் கவனம் செலுத்தி லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். அனுபவசாலிகளின் ஆலோசனைகளைப் பின்பற்றி வெற்றி கொள்வீர்கள். பெண்களுக்கு தாய் வழியில் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். 
மகம்: வெற்றி
பூரம்: மகிழ்ச்சி 
உத்திரம் 1ஆம் பாதம்: இன்பம்
 
 
கன்னி
நண்பர்களின் உதவிகள் மகிழ்ச்சியுடையதாக இருக்கும். வரவிற்கேற்ற செலவுகள் உண்டாகும். இனிமையாக பேசி மற்றவர்களைக் கவர்ந்து லாபம் கிடைக்கப்பெறுவீர்கள். 
உத்திரம் 2, 3, 4: மகிழ்ச்சி
அஸ்தம்: தனலாபம் 
சித்திரை 1, 2ஆம் பாதம்: இன்பம் 
 
 
துலாம்
பெற்றோரின் உடல் நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. தேவையில்லாத பயங்கள் மனதில் குழப்பத்தை உண்டு பண்ணும். மாணவர்கள் நண்பர்களுடன் வீண் பொழுது போக்குவதை தவிர்க்க வேண்டும். 
சித்திரை 3, 4ஆம் பாதம் : துக்கம் 
சுவாதி : துன்பம்
விசாகம் 1, 2, 3: கவனம்
 
 
விருட்சிகம்
வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். ஆடம்பர பொருட்கள் மீது அதிக நாட்டம் உண்டாகும். நவீன உக்திகள் மூலம் வாடிக்கையாளர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். 
விசாகம் 4: மகிழ்ச்சி 
அனுசம்: முன்னேற்றம்
கேட்டை: லாபம்
 
 
தனுசு
உடலில் வாயு சம்மந்தமாக சில தொந்தரவுகள் காணப்படும். வியாபாரம் சம்மந்தமாக புதிய கிளைகளை தொடங்க முயற்ச்சி செய்வீர்கள். ஓரளவு பண வரவின் மூலம் திருப்தி காணப்படும். 
மூலம்: துன்பம் 
பூராடம்: பயம் 
உத்திராடம் 1ஆம் பாதம்: லாபம்
 
 
மகரம்
அரசினரால் கிடைக்கப்பெறும் செய்திகள் அனுகூலமாக இருக்கும். ஆரோக்கியத்துடன் இருப்பதால் கடமையில் ஆர்வம் பிறக்கும். லாபம் சுமாராக இருக்கும். 
உத்திராடம் 2, 3, 4: தனலாபம்
திருவோணம்: வெற்றி
அவிட்டம் 1, 2 : இன்பம் 
 
 
கும்பம்
மங்கல நிகழ்ச்சிகள் நடத்துவதில் தடை உண்டாகி பின்பு விலகும். பேச்சு மற்றும் செயல்களில் நிதானத்துடன் செயல்படுவது அவசியம். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கப்பெறுவீர்கள். 
அவிட்டம் 3, 4: மகிழ்ச்சி 
சதயம் : கவனம்
பூரட்டாதி 1, 2, 3: இன்பம் 
 
 
மீனம்
வியாபாரத்தில் புதிய வழிகளை கையாண்டு வியாபாரத்தை பெருக்கிக் கொள்வீர்கள். பெண்களுக்கு தலைமைப் பொறுப்புக்கள் தேடி வரும். எதிர்பார்த்த பணிமாற்றம் கிடைக்கப்பெறுவீர்கள். 
பூரட்டாதி 4: இன்பம் 
உத்திரட்டாதி : லாபங்கள் 
ரேவதி : முன்னேற்றம்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--