2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

இன்றைய பலன்கள் (10.10.2012)

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 09 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இன்றைய பலன்கள் (10.10.2012)

மேடம்
குழந்தைகளுடன் சுற்றுலா சென்று மகிழ்வீர்கள். மாற்றுத் தொழிலில் லாபம் உண்டாகும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.
அஸ்வினி : மகிழ்ச்சி
பரணி : இன்பம்    
கிருத்திகை 1ஆம் பாதம்: செலவு


இடபம்
இரத்த சம்மந்தமான உறவுகள் மூலம் நன்மை கிடைக்கப்பெறுவீர்கள். வெளியில் செல்லும் போது கவனத்துடன் இருப்பது அவசியம். விருந்து மற்றும் உபசரிப்புக்களில் கலந்து கொள்வீர்கள்.
கிருத்திகை 2, 3, 4: கவனம்
ரோகிணி : செலவு
மிருகசீரிடம் 1, 2: இன்பம்


மிதுனம்
வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள நல்ல வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். கடின உழைப்பின் மூலம் ஆதாயத்தை தக்க வைத்துக்கொள்வீர்கள். பண வரவு சுமார்தான் என்றாலும் சமாளித்து விடுவீர்கள்.
மிருகசீரிடம் 2, 3: ஆர்வம்
திருவாதிரை: உழைப்பு
புனர்பூசம்: கவனம்


கடகம்
தொந்தரவு கொடுத்து வந்த நோய் நொடிகளில் இருந்து விடுதலை கிடைக்கப் பெறுவீர்கள். பெண்கள் பொறுமையுடன் பேசினால் பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம். உணவு விடயத்தில் கட்டுப்பாடு தேவை.
புனர்பூசம்: துன்பம்
பூசம் : பிரச்சினை
ஆயில்யம்: அலைச்சல்


சிம்மம்
நண்பர்களிடமிருந்து சரியான நேரத்தில் உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள். அரசு வகையில் லாபமும் அனுகூலமும் கிடைக்கப்பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய உக்திகளை செலுத்தி வெற்றி காண்பீர்கள்.
மகம்: மகிழ்ச்சி
பூரம்: இன்பம்
உத்திரம் 1ஆம் பாதம்: லாபம்


கன்னி
உடல்நிலை மேம்பாட்டிற்கான பயிற்சிகளில் ஈடுபடுவீர்கள். எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம். பெற்றோரின் உடல் நிலையில் அக்கறை காட்டுவது அவசியம்.
உத்திரம் 2, 3, 4: வெறுப்பு
அஸ்தம் : துன்பம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: செலவு



துலாம்
அக்கம் பக்கத்தினரிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகளுக்கு மீண்டும் பேச்சு வார்த்தைகள் நடைபெறும். 
சித்திரை 3, 4ஆம் பாதம்: இன்பம்
சுவாதி : துன்பம்
விசாகம் 1, 2, 3: வெற்றி


விருட்சிகம்
உஷ்ணம் சம்மந்தமான பிரச்சினைகளில் அவதிப்படுவீர்கள். ஒருசில வேலைகளில் இழுபறியான நிலை காணப்படும். செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம்.
விசாகம் 4: சிக்கனம்
அனுசம்: துக்கம்
கேட்டை : அலைச்சல்


தனுசு
பெண்களுக்கு தலைமைப் பொறுப்பிற்கான வாய்ப்புகள் கூடி வரும். பெண்களுடைய தேவைகள் நிறைவேறும் விதத்தில் பணவரவுகள் இருக்கும். குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபடும் வாய்ப்புக்கள் உண்டாகும்.
மூலம்: மகிழ்ச்சி
பூராடம்: தனலாபம்
உத்திராடம் 1ஆம் பாதம்: வெற்றி


மகரம்
விழிப்புணர்வுடன் இருப்பதால் சில இழப்புக்களைத் தவிர்கலாம். பிறரின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் நஷ்டங்களைத் தவிர்க்கலாம். உணவு மற்றும் ஆரோக்கிய விடயத்தில் கவனம் தேவை.
உத்திராடம் 2, 3, 4: துக்கம்
திருவோணம்: லாபம்
அவிட்டம் 1, 2: கவனம்


கும்பம்
வாடிக்கையாளர்களின் அதிருப்திக்கு ஆளாக இடமுண்டு. அதிக அலைச்சலால் உடல் நிலையில் சோர்வு உண்டாகும். செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம்.
அவிட்டம் 3, 4: கஷ்டம்
சதயம் : துன்பம்
பூரட்டாதி 1, 2, 3: தோல்வி


மீனம்
ஒருசில வேலைகளில் இழுபறியான நிலை காணப்படும். அக்கம் பக்கத்தினரிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. தொழிலில் சக நண்பர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பது நல்லது.
பூரட்டாதி 4: தவறுகள்
உத்திரட்டாதி : துன்பம்
ரேவதி : தோல்வி

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .