2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

இன்றைய பலன்கள் (17.10.2014)

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 16 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}இன்றைய பலன்கள் (17.10.2014)
 
மேடம்
வெகுநாள் கோரிக்கைள் நிறைவேறும். பணப்பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் உண்டு. விரும்பிய உணவு வகைகளை உண்டு மகிழ்வீர்கள்.
அஸ்வினி : மகிழ்ச்சி
பரணி : முன்னேற்றம்
கிருத்திகை 1ஆம் பாதம்: விருந்து 
 
 
இடபம்
வாழ்க்கை தரம் உயர புதிய அனுகூல வாய்ப்புக்கள் உருவாகும். தொழில் வளர்ச்சியில் திட்டமிட்ட இலக்கை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
கிருத்திகை 2, 3, 4: உயர்வு
ரோகிணி : மகிழ்ச்சி
மிருகசீரிடம் 1, 2: இன்பம் 
 
 
மிதுனம் 
உடல் நலத்தில் முக்கிய கவனம் தேவை. கடன்பட வேண்டிய சூழ்நிலைகள் இருக்கும். சில  தேவையில்லாத சங்கடங்கள் உருவாகும்.
மிருகசீரிடம் 2, 3: கவனம்
திருவாதிரை: கஷ்டம்
புனர்பூசம்: சிரமம்
 
 
கடகம்
இல்லத்தில் உள்ளவர்களின் செயல்கள் மன வருத்தம் தரலாம். வாகன பயணத்தில் மித வேகம் பின்பற்றுவது நல்லது. உறவினர்களிடையே இருந்து உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள்.
புனர்பூசம்: துன்பம்
பூசம்: கவனம்
ஆயில்யம்: உதவி
 
 
சிம்மம்
உங்கள் மனதில் புத்துணர்வும் செயல்களில் திறமையும் அதிகரிக்கும். நிலுவையில் இருந்த பணிகளை நினைவு படுத்தி நிறைவேற்றுவீர்கள். தேவையில்லாத பண செலவுகள் செய்ய வேண்டி வரும்.
மகம்: மகிழ்ச்சி 
பூரம்: இன்பம் 
உத்திரம் 1ஆம் பாதம்: செலவு
 
 
கன்னி
தவறான ஆலோசனைகள் கிடைக்கப்பெறுவீர்கள். சுயமான செயல்பாடு மட்டுமே தகுந்த வெற்றியைத்தரும். வியாபாரம் வளர்வதற்கு கிடைத்த புதிய வாய்ப்பைப் பயன்படுத்துவீர்கள். 
உத்திரம் 2, 3, 4: பிரச்சினை
அஸ்தம்: கவனம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: வாய்ப்பு 
 
 
துலாம்
கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். உடல் நல ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தேவையான பணிகளை மகிழ்ச்சியுடன் செய்து முடிப்பீர்கள்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : மகிழ்ச்சி 
சுவாதி : இன்பம்
விசாகம் 1, 2, 3: வெற்றி  
 
 
விருட்சிகம்
சுய கௌரவ சிந்தனைகள் அதிகரிக்கலாம். தொழிலில் உருவான மாறுபட்ட சூழ்நிலையை சரி செய்வது நல்லது. குறைந்த அளவில் பண வரவு இருக்கும். 
விசாகம் 4: சிந்தனை
அனுசம்: தடை
கேட்டை: வரவு
 
 
தனுசு
இன்று நண்பர் மற்றும் உறவினர்கள் ஆதரவு பலமாக இருக்கும். கிடப்பில் இருந்த திட்டங்களை செயல்படுத்த முயற்ச்சிப்பீர்கள். நிலுவைப்பணம் எளிதில் வசூலாகும்.
மூலம்: ஆதரவு
பூராடம்: முன்னேற்றம்
உத்திராடம் 1ஆம் பாதம்: வரவு
 
 
மகரம்
வியாபார வளர்ச்சியில் புதிய பரிணாமம் ஏற்படும். சராசரி பணவரவுடன் உபரி வருமானம் கிடைக்கும். உறவினர்களின் உதவிக்கு பிரதி உபகாரம் செய்வீர்கள்.
உத்திராடம் 2, 3, 4: வளர்ச்சி
திருவோணம்: வரவு
அவிட்டம் 1, 2: மகிழ்ச்சி 
 
 
கும்பம்
உங்களின் தன்மானத்திற்கு சிறு சோதனைகள் வரலாம். மனதில் பொறுமை, நேர்மை குணங்களை பின்பற்றுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும்.
அவிட்டம் 3, 4: சோதனை 
சதயம் : கவனம்
பூரட்டாதி 1, 2, 3: போட்டி
 
 
மீனம்
இன்று உங்களின் செயல்களில் சில தவறுகள் உண்டாகலாம். வியாபார வளர்ச்சி பெற கூடுதல் பணி தேவைப்படும். உடல் நலம் சீராக தகுந்த மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்வீர்கள்.
பூரட்டாதி 4: கவனம் 
உத்திரட்டாதி : உழைப்பு 
ரேவதி : செலவு

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .