2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

இன்றைய பலன்கள் (29.11.2011)

A.P.Mathan   / 2011 நவம்பர் 28 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (29.11.2011)

இன்று கர வருடம் கார்த்திகை மாதம் 13ஆம் நாள் (29.11.2011) செவ்வாய்க்கிழமை. சித்த யோகமும் சதுர்த்தி திதியும் உத்திராடம் நட்சத்திரம் காலை 12.27 மணிவரை, பின்பு திருவோணம்.
இராகு காலம் : காலை 03.00 மணி முதல் 04.30 மணிவரை
எமகண்டம் : காலை 09.00 மணி முதல் 10.30 மணிவரை, இரவு 01.30 மணி முதல் 03.00 மணிவரை.
நல்ல நேரம் : காலை 07.30 மணி முதல் 08.00 மணிவரை, மாலை 04.45 மணி முதல் 05.45 மணிவரை.



மேடம்
பகைவர்களினால் சில குழப்பங்கள் ஏற்படும், புதிய முயற்சிகள் நஷ்டத்தை ஏற்படுத்தும், தேவையற்ற பேச்சுவார்த்தைகளினால் பகை.
அஸ்வினி: சிரமம்
பரணி: இடையூறுகள்
கிருத்திகை 1ஆம் பாதம்: துன்பம்


இடபம்
விசித்திரமான பொருள் காணக்கிடைக்கும், தெய்வீக வழிபாடுகளில் நாட்டம் அதிகரிக்கும், பிறரின் பிரச்சினைகளினால் துன்பம்.
கிருத்திகை 2, 3, 4: நம்பிக்கை
ரோகிணி: கவலை
மிருகசீரிடம் 1, 2: ஆச்சரியம்


மிதுனம்
சில இடமாற்றங்கள் லாபகரமாக அமையும், இசையில் நாட்டம் அதிகரிக்கும், தூர பிரயாணங்கள் செல்வதனால் அனுகூலம்.
மிருகசீரிடம் 2, 3: அமைதி
திருவாதிரை: பிரயாணம்
புனர்பூசம்: நன்மை


கடகம்
பெரியார்களின் ஆலோசனைகள் நம்பிக்கை தரும், பணவரவு ஏற்படும், அதிகாரிகளுடன் சிறு மனகசப்புக்கள் ஏற்படும்.
புனர்பூசம்: அதிர்ஷ்டம்
பூசம்: நல்வழி
ஆயில்யம்: நிதானம்


சிம்மம்
அறிமுகமற்ற நண்பர்களினால் பிரச்சினைகள் ஏற்படும், திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு, மனபயங்கள் வந்து நீங்கும்.
மகம்: சங்கடம்
பூரம்: கலக்கம்
உத்திரம் 1ஆம் பாதம்: நிம்மதியின்மை


கன்னி
குடும்பத்தில் உற்றார் உறவினர்களின் வருகை, நாவுக்கு சுவையான உணவுகள் கிடைக்கும், புதிய திட்டங்களை முன்னெடுத்தல்.
உத்திரம் 2, 3, 4: அன்யோன்யம்
அஸ்தம்: மகிழ்ச்சி
சித்திரை 1, 2ஆம் பாதம்: ஆரோக்கியம்


துலாம்
இசைத்துறையில் நாட்டம் அதிகரிக்கும், தொழில் தொடர்பான இடமாற்றங்கள் ஏற்படும், சாதுக்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: சுபம்
சுவாதி: ஆசீர்வாதம்
விசாகம் 1, 2, 3: மனஅமைதி


விருட்சிகம்
பணவரவுகள் கிடைக்கும், புதிய காரியங்கள் தடையின்றி நிறைவேறும், பகைவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும்.
விசாகம் 4: வெற்றி
அனுசம்: வரவு
கேட்டை: நாவடக்கம்


தனுசு
அதிக அலைச்சல்களை மேற்கொள்ளுதல், தீய நண்பர்களின் சகவாசங்களை தவிர்க்கவும், மனகஷ்டங்கள் வந்து நீங்கும்.
மூலம்: துன்பம்
பூராடம்: பகை
உத்திராடம் 1ஆம் பாதம்: வெறுப்பு


மகரம்
குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகை, நண்பர்களின் உதவிகள் கிடைக்கும், புதிய செய்திகள் வந்து சேரும்.
உத்திராடம் 2, 3, 4: நன்மை
திருவோணம்: குடும்ப மகிழ்ச்சி
அவிட்டம் 1, 2: தகவல்


கும்பம்
தொலைதூர பயணங்கள் செல்வதனால் அனுகூலம், புதிய காரியங்களை செயல்படுத்தலாம், சில இடமாற்றங்கள் ஏற்படும்.
அவிட்டம் 3, 4: மகிழ்ச்சி
சதயம் : முயற்சி
பூரட்டாதி 1, 2, 3: நன்மை


மீனம்
அயராத உழைப்பினால் நிறைவான ஆதாயம், பெரியார்களின் அன்பும் ஆதாரவும் கிடைக்கும், புதிய முயற்சிகளினால் முன்னேற்றம்.
பூரட்டாதி 4: நிம்மதி
உத்திரட்டாதி: ஆலோசனைகள்
ரேவதி: சுபம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X