2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

இன்றைய பலன்கள் (31.03.2014)

A.P.Mathan   / 2014 மார்ச் 30 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}இன்றைய பலன்கள் (31.03.2014)

மேடம்
ஆன்மீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். சில முயற்சிகளெல்லாம் தள்ளிப்போய் தான் முடியும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.
அஸ்வினி : அமைதி
பரணி : துன்பம்
கிருத்திகை 1ஆம் பாதம்: உதவி


இடபம்
போட்டிகளில் வெற்றி கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். பிற்பகலில் செலவுகள் கூடும். வீண் அலைச்சல் ஏற்படும்.
கிருத்திகை 2, 3, 4: மகிழ்ச்சி
ரோகிணி : அலைச்சல்
மிருகசீரிடம் 1, 2: செலவு


மிதுனம்
பணவரவு அதிகரிக்கும். விருந்தினர்கள் வருகையால் குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். பிற்பகலில் தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு கூடும்.
மிருகசீரிடம் 2, 3: இன்பம்
திருவாதிரை: வரவு
புனர்பூசம்: மகிழ்ச்சி


கடகம்
கற்பனை ஆற்றல் பெருகும். பணவரவு அதிகரிக்கும். பெற்றோர், உற்றார், உறவினர்களால் ஆதாயம் உண்டு. பரிசு, பாராட்டுக்கள் குவியும்.
புனர்பூசம்: இன்பம் 
பூசம் : ஆதாயம்
ஆயில்யம்: மகிழ்ச்சி


சிம்மம்
செலவுகள் அதிகமாகும். இடமாற்றம், பதவி மாற்றம் உண்டாகும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மதிப்பு, மரியாதை கூடும்.
மகம்: மதிப்பு
பூரம்: இன்பம்
உத்திரம் 1ஆம் பாதம்: செலவு


கன்னி
ஆதாயம், அனுகூலம் உண்டு. ஐலப் பொருட்கள் லாபம் கொண்டு வரும். பிற்பகலில் எதிலும் விழிப்பு தேவை. கண்ணாடி பொருட்களை கவனத்துடன் கையாளவும்.
உத்திரம் 2, 3, 4: இன்பம்
அஸ்தம்: அலைச்சல்
சித்திரை 1, 2ஆம் பாதம்: மகிழ்ச்சி


துலாம்
பொது நலப்பணிகள் தர்ம காரியங்களில் ஈடுபாடு கூடும். வாயுப் பதார்த்தங்கள் அசைவ உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : கவனம்
சுவாதி: இன்பம்
விசாகம் 1, 2, 3: லாபம்


விருட்சிகம்
மனதில் நம்பிக்கை பிறக்கும். துணிச்சல் அதிகரிக்கும். ஏமாந்த தொகையும் கைக்கு வரும். மனக்கசப்பால் பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர்வீர்கள்.
விசாகம் 4: லாபம்
அனுசம்: மாற்றம்
கேட்டை: இன்பம்


தனுசு
குழப்பங்கள், சலனங்களால் மன அமைதி குறையும். பிள்ளைகள் நலனில் கவனம் தேவை. சொத்து பிரச்சினைகள் தீரும்.
மூலம்: துன்பம்
பூராடம்: கவனம்
உத்திராடம் 1ஆம் பாதம்: இன்பம்


மகரம்
எதிர்ப்புக்கள் குறையும். வீணாக அலைய வேண்டி இருக்கும். சுப விரயச் செலவுகள் அதிகமாகும். கொடுக்கல் - வாங்கலில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும்.
உத்திராடம் 2, 3, 4: மகிழ்ச்சி
திருவோணம்: இன்பம்
அவிட்டம் 1, 2: வெற்றி


கும்பம்
சிக்கனமாக வாழ்ந்தால் மட்டுமே புதிய கடன் வராமல் தடுக்க முடியும். அதிகாரிகளை அனுசரித்து போவது நல்லது. எதிர்ப்புகள் விலகும்.
அவிட்டம் 3, 4: கவனம்
சதயம் : எச்சரிக்கை
பூரட்டாதி 1, 2, 3: மாற்றம்


மீனம்
குடும்பத்தாரிடம் சுமூகமாக பழகவும். விரும்பாத இடத்திற்கு இடமாறுதல்கள் வந்து சேரும். சக பெண்கள் ஊழியர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பூரட்டாதி 4: வெற்றி
உத்திரட்டாதி : இன்பம்
ரேவதி : கவனம்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .