2020 ஓகஸ்ட் 06, வியாழக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (15.06.2020) திடீர் திருப்பம் நிறைந்த நாள்!

Editorial   / 2020 ஜூன் 15 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேஷம்: குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. திடீர் பயணங்கள் இருக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். 

ரிஷபம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள்.

மிதுனம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள்.

கடகம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்கள் உங்கள் வீடு தேடி வருவார்கள்.

சிம்மம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்துயோசிப்பீர்கள். 

கன்னி: கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். தாயாரின் உடல் நிலை சீராகும். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் அதிகரிக்கும்.

துலாம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.

விருச்சிகம்: வருங்கால  திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். நீங்கள் உங்களை சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்து கொள்வீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். கனவு நனவாகும் நாள்.

தனுசு: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளி போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தாய் வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். நன்மை கிட்டும் நாள்.

மகரம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்களை சுற்றி இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சொந்த பந்தங்களில் சிலர் கேட்டஉதவியை செய்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.

கும்பம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும்.  நட்பு வட்டம் விரியும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

மீனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--