Editorial / 2020 மே 18 , மு.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேஷம்: வாழ்க்கையில் எதிர்பார்த்த மாற்றங்கள் வந்து ஏற்றம் தரும். குடும்ப உறவுகளிடையே மனைவியால் மனக்கசப்பு உருவாகலாம். வாடிக்கையாளர்களின் மனம் அறிந்து நடந்தால் இலாபம் அதிகரிக்கும்.
ரிஷபம்: பெண்களின் நட்பால் சுகம் ஏற்படும். பெரியோர் ஆசியால் மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டு. தொழில், வியாபாரத்தில் தொல்லைகள் குறைந்து, எல்லைகள் விரிவடைந்து ஏற்றம் வரும்.
மிதுனம்: வெற்றி மேல் வெற்றி வரும் நாள். அரசு அதிகாரிகள் மூலமாக எதிர்பார்த்த அனைத்து வேலைகளும் அனுகூலமான திசைகளில் நகரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து நல்ல தேர்ச்சி அடைவர்.
கன்னி: பேச்சால் பெருமாளையும் அசத்திவிடுவீர்கள். அப்படி இருக்கையில் வருமானத்திற்குக் கேட்கவேண்டுமா ? வளமான வாழ்வும், வாகன யோகமும் உண்டு. வியாபாரத்தில் கவனத்துடன் செயல்பட்டால் இழப்பைத் தவிர்க்கலாம்.
மகரம்: சந்தோஷமான சூழ்நிலைகள் மனதில் தெம்பைத் தரும். மனைவியின் உதவிகள் கண்டு மன மகிழும். குழந்தைகள் பால் பாசம் பொழிவீர்கள். அரசு ஆதரவால் தொழில் வளர்ச்சியில் திருப்தி நிலவும்.
கடகம்: வாழ்க்கையில் நல்ல, புதிய புதிய மாற்றங்கள் ஏற்படலாம். நேர்மையான வழிகளில் பணம் சம்பாதிக்க முயலுங்கள். கோபத்தைக் குறைத்தால் குடும்பத்தாரிடையே நல்ல ஒற்றுமையை எதிர்பார்க்கலாம்.
சிம்மம்: எந்தவொரு விஷயத்திலும் மிகுந்த எச்சரிக்கையுடன் நடக்கவேண்டிய நாள். பிறர் துன்பத்தில் மகிழ்ச்சி காணும் எண்ணத்தைக் கைவிடுவது நல்லது. உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால் உயர்வு உண்டு.
துலாம்: இன்று, எல்லாம் ஜெயமே. பாதைவிட்டு விலகுவர் பகைவர்கள். கேட்காமலே உதவ முன்வருவர் நண்பர்கள். வீடு, மனை வாங்கும் எண்ணங்கள் மனதில் எழும். அதற்காக எதிர்பார்த்த கடன்கள் எளிதில் கிடைக்கும்.
மீனம்: பொருளாதார நிலை போற்றும்படியாய் இருக்கும். வசீகரமான பேச்சால் வருமானம் கூடும். வருமான உயர்வால் வளமும் அதிகரிக்கும். விரும்பிய வாகனத்தில் வெளியூர் செல்வீர்கள். மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவர்.
தனுசு: வேண்டாத அலைச்சல்களால் ஓய்வு குறையும். தெய்வமான அம்மாவின் தேக சுகத்தைப் பேணவேண்டிய நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த வரவுகள் இல்லாததால், புதிய முயற்சிகளைக் கைவிடுவது நல்லது.
விருச்சிகம்: ஆரோக்கியத்தைப் பொருத்து குழந்தைகளை நல்ல அக்கறையுடன் கவனிப்பது முக்கியம். வெளியூர்ப் பயணங்களில் கவனம் தேவை. அமைதியும், ஆதரவான பேச்சும் எதிர்ப்புக்களைக் குறைக்கும்.
கும்பம்: எதிர்பார்த்த தனலாபங்களில் ஏமாற்றமே மிஞ்சும். மனைவியின் உடல் நிலையில் அக்கறை தேவை. புதிய தொழில் முதலீடுகளை ஒத்திப் போடுவது நல்லது. வார்த்தைகளை அளந்து பேசுவது நல்லது.
6 minute ago
17 minute ago
17 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
17 minute ago
17 minute ago
23 minute ago