2020 ஓகஸ்ட் 06, வியாழக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (23.05.2020) அதிர்ஷ்டமுள்ள நாள்!

Editorial   / 2020 மே 23 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேஷம் : நீங்கள்மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய நாள். பாடல்கள் கேட்பது மனதினை அமைதியாக வைத்திருக்க உதவும். கோபம் மற்றும் உணர்ச்சியை கட்டுப்படுத்துங்கள். 

ரிஷபம் : பொறுமையாக இருக்க வேண்டிய நாள். முக்கிய முடிவுகளை  எடுக்க வேண்டாம். அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க முயற்சி செய்யுங்கள்.

மிதுனம் : இன்று உணர்ச்சிவசப்பட கூடாது. எதனையும் எளிதாக எடுத்து கொள்ள வேண்டும். ஆன்மீகத்தில் நாட்டமும் ஈடுபாடும் உங்களுக்கான வளர்ச்சியை தரும்.

கடகம் : இன்றைய நாள் சமநிலையுடன் இருக்கும். நட்பு வட்டாரம் பெரிதாகும். அதிர்ஷ்டமுள்ள நாள்.

சிம்மம் : உங்கள் முயற்சிகள் அனைத்திற்கும் வெற்றி கிடைக்கும். சாதாரண செயல்கள் கூட உத்வேகம் அளிக்கும் வகையில் அமையும்.  பெரியதாக சாதித்ததை போன்ற உணர்வு ஏற்படும்.

கன்னி : இன்று அமைதியாக இருத்தல் நல்லது. உங்களது சபல உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள்.

துலாம் : செயல்களை கவனமாக செயல்படுத்த வேண்டும். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். ஆன்மீகத்தில் உங்களை ஈடுபடுத்தி கொள்ளுங்கள்.

விருச்சிகம் : இன்று வெற்றி எளிதில் கிடைத்துவிடும். மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள். உங்களின் மனஉறுதி வெற்றிக்கு அருகில் அழைத்து செல்லும்.

தனுசு : இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பானதாக அமையும். உங்கள் நட்பு வட்டாரத்தின் நம்பிக்கையை பெறுவீர்கள். இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

மகரம் : தைரியமாக இருக்க வேண்டிய நாள்.  தன்நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். எப்போதும் நம்பிக்கையை இழந்து விடாதீர்கள்.

கும்பம் : இன்று குறைந்த அளவு பலன்கள் கிடைக்கும். வெற்றி பெற தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். நேர்மறையான எண்ணங்களை வளர்த்து கொள்ளுங்கள்.

மீனம் : இன்றைய நாள் சிறப்பானதாக இருக்கும். செயல்களில் முன்னேற்றம் இருக்கும். கவனமுடன் செயல்பட வேண்டும். இன்றைய முக்கிய முடிவுகள் உங்களுக்கான வளர்சியை தரும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--