Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஜூலை 27 , மு.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும் அணு விஞ்ஞானியுமான டொக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் முதலாமாண்டு நினைவுதினமான இன்று, அவர் பிறந்த ராமேஸ்வரத்தில், வெண்கலச் சிலையொன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர்களான எம். வெங்கையா நாயுடு, மனோகர் பாரிக்கர் உட்பட முன்னணி அரசியல்வாதிகள் கலந்துகொண்டனர்.
7 அடி உயரமான முழு உருவச் சிலையான இது, தங்கச்சிமடம் பேய்க்கரும்பு பகுதியில் அமைந்துள்ள நினைவிடத்தில் அமைக்கப்பட்டது. ஹைதராபாத்திலிருந்து இந்தச் சிலை கொண்டுவரப்பட்டிருந்தது.
இச்சிலையைத் திறந்து வைத்து உரையாற்றிய அமைச்சர் வெங்கையா நாயுடு, "எங்கள் மனங்களிலும் இதயங்களிலும் டொக்டர் கலாம் எப்போதும் வாழ்வார். அவருடைய எண்ணங்கள், எப்போதும் எங்களுடன் தொடர்ந்திருக்கும். டொக்டர் கலாம், காலமாகிவிட்டார் என்பதை நம்புவதற்கு இப்போதும் கடினமாகவுள்ளது" என அவர் தெரிவித்தார்.
சிலை திறந்து வைக்கப்பட்ட இடத்திலேயே, அப்துல் கலாமுக்கான தேசிய நினைவகம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல்லை, அமைச்சர்களான வெங்கையா நாயுடு, மனோகர் பாரிக்கர் ஆகியோர் நட்டு வைத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago