2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

'அபேனொமிக்ஸ்'ஐ ஜப்பானியர்கள் ஏற்பார்களா?

Gopikrishna Kanagalingam   / 2016 ஜூலை 10 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானின் மேலவைக்கான வாக்கெடுப்பு, இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெறுகிறது. இது, பிரதமர் ஷின்ஸோ அபேயின் பொருளாதாரக் கொள்கைகளை மக்கள் ஏற்கிறார்களா, இல்லையா என்பதை வெளிப்படுத்தும் தேர்தலாக அமையவுள்ளது.

242 உறுப்பினர்களைக் கொண்ட ஜப்பானிய மேலவை, ஆறு ஆண்டுகளை பதவிக்காலமாகக் கொண்டது. ஆனால், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, 121 ஆசனங்களின் பதவிக்காலம் நிறைவடைந்து, அவற்றுக்கான தேர்தல் நடைபெறும். நேற்று இடம்பெற்ற வாக்கெடுப்பும், 121 ஆசனங்களுக்காக இடம்பெற்றன.

ஜப்பானியப் பிரதமர் ஷின்ஸோ அபே, தனது பொருளாதார சீர்திருத்தங்களை, 'அபேனொமிக்ஸ்" (அபே, பொருளாதாரத்தைக் குறிக்கும் ஆங்கில வார்த்தையான எக்கனொமிக்ஸ் ஆகியவற்றின் கூட்டு) என அழைப்பதோடு, அந்தச் சீர்திருத்த்துக்கான கருத்துக் கணிப்பாக, இந்தத் தேர்தலைக் கணிக்குமாறு கோரியிருந்தார்.

இதற்கு முன்னர் இடம்பெற்ற தேர்தலைத் தொடர்ந்து, 116ஆசனங்களை அவரது லிபரல் ஜனநாயகக் கட்சி பெற்றதோடு, அதன் தோழமைக் கட்சியான கோமெய்ட்டோவின் 20 ஆசனங்களின் துணையோடு, மேலவையைக் கட்டுப்படுத்தி வந்தது. நேற்றைய 121 ஆசனங்களில் 46 ஆசனங்களை அவரது கட்சியோ அல்லது தோழமைக் கட்சியுடன் இணைந்தோ பெற முடிந்தால், பெரும்பான்மையைப் பெற முடியும்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .