Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஜூலை 11 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிரியாவின் அலெப்போ நகரத்துக்கான ஒரேயொரு வழங்கற் பாதையை திறப்பதற்காக எதிரணியினர் மேற்கொண்ட கடுமையான தாக்குதலை முறியடித்த சிரிய அரசாங்கப் படைகள், குறைந்தது 29 போராளிகளைக் கொன்றுள்ளதாக கண்காணிப்புக் குழுவொன்று ஞாயிற்றுக்கிழமை (10) தெரிவித்துள்ளது.
எதிரணியின் கட்டுப்பாட்டில் இருக்கும் அலெப்போ நகரத்தின் கிழக்குப் பகுதி, ஏறத்தாழ அரசாங்கப் படைகளால் முற்றுகைக்குள்ளாக்கப்பட்டுள்ள நிலையில், இப்பகுதியை நோக்கிச் செல்லும் கஸ்டெல்லோ வீதியிலிருந்து அரசாங்கப் படைகளை பின்னோக்கி தள்ளும் பொருட்டே, மேற்கூறப்பட்ட வலிந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையியிலேயே, பேலக் அல்-ஷாம் போராளிக் குழு மற்றும் அல்-கொய்தாவுடன் இணைந்த அல்-நுஸ்ரா முன்னணியைச் சேர்ந்த போராளிகள் 29 பேர், மோதலிலோ அல்லது அரசாங்கப் படைகளினால் புதைக்கப்பட்ட நிலக்கண்ணி வெடிகளில் சிக்கியோ கொல்லப்பட்டதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
அரசாங்கப் படைகளிலிலும் இறப்புகள் ஏற்பட்டதாக ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட கண்காணிப்பகம் தெரிவித்துள்ள போதும் அதன் எண்ணிக்கை உடனடியாக தெரியவரவில்லை என்று கூறியுள்ளது.
தாக்குதல் நிறைவுக்கு வந்துள்ளதாகவும், குறித்த வீதியானது முழுமையாக மூடப்பட்டிருப்பதாகவும் குறித்த கண்காணிப்பகத்தின் தலைவர் றமி அப்டெல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
3 hours ago