Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 மார்ச் 06, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 மே 18 , பி.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
தன்னைப் பதவியிலிருந்து அகற்றுவதற்காக, நாட்டுக்குள்ளேயிருந்தும் ஐக்கிய அமெரிக்காவிலிருந்தும் சதி மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்து, நாட்டில் அவசரகால நிலையை, கடந்த வாரம் ஜனாதிபதி பிரகடனப்படுத்தியிருந்த போதிலும், ஜனாதிபதிக்கெதிராக இன்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அவசரகால நிலை காரணமாக, பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும், அதிகமான அதிகாரங்களை ஜனாதிபதி வழங்கியுள்ள நிலையில், அவற்றைச் சவால்படுத்துவதாக, இன்றைய ஆர்ப்பாட்டங்கள் அமைந்திருந்தன.
ஏற்கெனவே, ஜனாதிபதி பதவி விலக வேண்டுமெனத் தெரிவித்து, எதிர்க்கட்சிகளால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, அதற்கான சர்வஜன வாக்கெடுப்பை மேற்கொள்ளுமாறு கோரி, 1.8 மில்லியன் கையெழுத்துகளை, தேர்தல்கள் ஆணைக்குழுவில் எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்திருந்தன.
எனினும், சர்வஜன வாக்கெடுப்பென்பது சாத்தியமற்றது எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ, வழங்கப்பட்ட 1.8 கையெழுத்துகள், மோசடியானவை எனத் தெரிவித்தார்.
வேறொரு சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு, ஐக்கிய அமெரிக்காவைக் குற்றஞ்சாட்டினார். நாட்டில் ஆதிக்கத்தை அமெரிக்கா கொண்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, கடந்த வாரம் மாத்திரம் நாட்டின் விமான எல்லைக்குள் இரு தடவைகள், அமெரிக்கக் கண்காணிப்பு விமானங்கள் உள்நுழைந்திருந்ததாகக் குற்றஞ்சாட்டினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
05 Mar 2021
05 Mar 2021