Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2016 மார்ச் 28 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷின் ஆட்சி மதமாக, இஸ்லாத்தை இல்லாது செய்து, மதச்சார்பற்ற நாடாக அதனை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதற்கு எதிராக, பங்களாதேஷில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
பங்களாதேஷின் பாரிய இஸ்லாமியக் கட்சியான ஜமாத்-ஈ-இஸ்லாமி கட்சியே, இதற்கான அழைப்பை விடுத்திருந்தது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இந்நாட்டில், அதனை ஆட்சி மதத்திலிருந்து நீக்குதலென்பது, ஆழ்ந்த நோக்கங்களைக் கொண்ட சதி முயற்சி என, அக்கட்சி குற்றஞ்சாட்டியது.
'பங்களாதேஷ், 90 சதவீதம், முஸ்லிம் தேசமாகும். அரச மதமாக இஸ்லாத்தை அரசியலமைப்பிலிருந்து நீக்கும் எந்தவொரு முயற்சிக்கும், மக்கள் ஆதரவளிக்க மாட்டார்கள். இந்த முயற்சி, மதங்களுக்கெதிரான வெகுசிலரைத் திருப்திப்படுத்தவே மேற்கொள்ளப்படுகிறது" என, அக்கட்சியினால் வெளியிடப்பட்ட அறிவிப்பொன்று தெரிவித்தது.
1971ஆம் ஆண்டு, பாகிஸ்தானிலிருந்து சுதந்திரம் பெற்ற பங்களாதேஷ், மதசார்பற்ற நாடாகவே அறிவிக்கப்பட்டது. ஆனால், 1988ஆம் ஆண்டில் ஆட்சிபுரிந்த இராணுவ ஆட்சியாளர்கள், இஸ்லாத்தை, பங்களாதேஷின் ஆட்சி மொழியாகப் பிரகடனப்படுத்தியிருந்தார்கள்.
இதற்கெதிரான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், மதசார்பற்றவர்கள் இணைந்து, மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவொன்றை, விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு, அந்நீதிமன்றம் சம்மதித்திருந்தது.
இதனைத் தொடர்ந்தே, இதற்கெதிரான எதிர்ப்புகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததோடு, ஹர்த்தாலுக்கான அழைப்பு, இன்று விடுக்கப்பட்டிருந்தது.
இன்று, சில இடங்களில் ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் இடம்பெற்றிருந்தன. ஆனால், அலுலகங்களும் பாடசாலைகளும் தனியார் விற்பனை நிலையங்களும், வழக்கம் போல இயங்கியிருந்தன.
4 hours ago
17 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
17 Sep 2025