2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

இந்தியாவில் பொதுநலவாய போட்டிக்கான தீச்சுடர்

Super User   / 2010 ஜூன் 29 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுநலவாய போட்டிக்கான தீச்சுடர் உலக நாடுகளில் வலம் வந்த பின்னர் இறுதியாக, பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட மேற்படி தீச்சுடரை பொதுநலவாய போட்டி ஒருங்கிணைப்புக்குழு பேரவையின்  தலைவரான சுரேஷ் கல்மாடியிடம்,  பாகிஸ்தான் ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் சையத் ஆரிப் ஹசன் ஒப்படைத்தார்.

அடுத்த 100 நாள்களுக்கு இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் இந்த தீச்சுடர் தொடர் ஓட்டமாக எடுத்துச் செல்லப்பட்டு இறுதியாக பொதுநலவாய போட்டி நடைபெறவிருக்கும் புதுடில்லிக்கு எடுத்துச் செல்லப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருடம்  ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி தீச்சுடர் ஓட்டத்தை பிரிட்டிஷ்  மகாராணி எலிசபெத் பாக்கிங்காம் அரண்மனையில் தொடக்கி வைத்திருந்தபோது, இந்திய ஜனாதிபதி  பிரதீபா பாட்டீல் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--