2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

இந்திய விமான சேவையில் பாதிப்பு; இதுவரையில் 76 விமானங்கள் ரத்து

Super User   / 2010 மே 26 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

உரிய நேரத்தில் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்து ஏர் இந்தியா ஊழியர்கள் நேற்று தொடங்கிய திடீர் வேலை நிறுத்தம் காரணமாக இந்திய விமான சேவை அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக இதுவரை ஏர் இந்தியாவின் 76 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதும் சுமார் 20 ஆயிரம் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இதனால் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர் உட்பட முக்கிய நகரங்களில் விமான போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேல், ஊழியர் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் அதனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

அரசின் எச்சரிக்கையை மீறி விமான ஊழியர்கள் தொடர்ந்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால் இன்றும் விமானங்களை ரத்து செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதனால் இந்தியா முழுவதும் 76 விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.

டெல்லியில் 24, மும்பையில் 37, கொல்கத்தாவில் 6, பெங்களூரில் 2 விமானங்கள் ரத்தாகி உள்ளன. சென்னையில் இருந்து சிங்கப்பூர், கோலாலம்பூர், மும்பை, கோவை, புவனேசுவர், பெங்களூர், திருவனந்தபுரம், கொச்சி நகரங்களுக்கு செல்லும் 7 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் பல விமானங்களை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .