Shanmugan Murugavel / 2016 டிசெம்பர் 18 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தோனேஷிய இராணுவப் போக்குவரத்து விமானமொன்று, இந்தோனேஷியாவின் கிழக்குப் பகுதியில் இன்று வீழ்ந்ததில், 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பப்புவா மாகாணத்திலுள்ள டிமிகா நகரத்திலிருந்து புறப்பட்ட ஹெர்குலஸ் சி-130 ரக விமானமானது, 12 பணியாளர்களையும், ஒரு பயணியையும் காவிச் சென்ற நிலையில், அது தரையிறங்க திட்டமிடப்பட்டதுக்கு சிறிது நேரத்துக்கு முன்னர் மலைப்பாங்கான பிராந்தியத்தில் வீழ்ந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
உள்ளூர் நேரப்படி காலை 6.08க்கு, தரையிலுள்ள இயக்குநர் விமானத்தை கண்டிருந்ததாகவும், 6.09க்கு விமானம் தொடர்பை இழந்ததாக, இந்தோனேஷிய விமானப் படையின் தளபதி அகஸ் சுப்ரியட்னா தெரிவித்துள்ளார். 6.13க்கு விமானம் தரையிறங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த விமானத்தில், மூன்று விமானிகளும், எட்டு தொழில்நுட்பவியலாளர்களும், இடஞ்சுட்டுநர் ஒருவரும், இராணுவ அதிகாரியொருவரும் உணவும் சீமெந்தும் இருந்ததாக சுப்ரியட்னா மேலும் தெரிவித்துள்ளார்.
விமானம் வீழ்ந்த பகுதியின் வானிலையானது எதிர்வுகூற முடியாதது என மேலும் தெரிவித்த சுப்ரியட்னா, விமானம் விழ முதல் முகிலுக்குள் உள்ளே சென்று வெளியே வந்ததாகக் கூறியுள்ளார்.
விமானத்தின் சிதைவுகளை உடனடியாக மீட்பு பணியாளர்கள் கண்டுபிடித்ததுடன், 13 உடல்களும் மீட்கப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
2 hours ago
4 hours ago
9 hours ago
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
9 hours ago
17 Jan 2026