2021 மார்ச் 04, வியாழக்கிழமை

இந்தியாவில் பிணை வழங்கப்பட்டு இத்தாலியைச் சென்றடைந்தார் கடற்படை வீரர்

Shanmugan Murugavel   / 2016 மே 29 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு மீனவர்களைக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இத்தாலியக் கடற்படை வீரர்களில் ஒருவரான சல்வட்டோர் ஜிரோன், தனது நாட்டைச் சென்றடைந்துள்ளார்.

2012ஆம் ஆண்டு இடம்பெற்ற இச்சம்பவத்தைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட இரண்டு கடற்படை வீரர்களில் ஒருவரான இவர், புதுடெல்லியிலுள்ள இத்தாலியத் தூதரகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். மற்றையவரான மஸ்ஸிமிலியானோ லாட்டோரே, உடல்நிலை காரணமாக நாடு திரும்ப அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சர்வதேச தீர்ப்பாயத்தின் முடிவு கிடைக்கும் வரை, அவர் நாடுதிரும்ப, இந்திய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

இந்நிலையில் கடற்படைச் சீருடையுடன் இத்தாலியைச் சென்றடைந்த அவரை, இத்தாலியின் பாதுகாப்பமைச்சர் றொபேர்ட்டா பினோட்டி, ஆரத்தழுவி வரவேற்றார். பாதுகாப்பமைச்சர் தவிர, வெளிநாட்டமைச்சர், கடற்படைத் தளபதி உள்ளிட்ட உயரதிகாரிகளும் பங்குகொண்டிருந்தனர்.

குறித்த இருவரும், எங்கு வைத்து வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டுமென, நெதர்லாந்தின் தலைவர் ஹேக்-இல் உள்ள நடுவண் தீர்ப்பாய நீதிமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டு வரும் நிலையில், சர்வதேச எல்லைக்குள் இச்சம்பவம் இடம்பெற்றதால், இந்தியாவில் வைத்து விசாரிக்கப்படக்கூடாது என இத்தாலியும், தமது எல்லைக்குள் நடந்ததால், இந்தியாவில் வைத்தே விசாரிக்கப்பட வேண்டுமென இந்தியாவும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .