2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

ஈராக் இராணுவ தளத்தில் ஐ.எஸ் தாக்குதல்: 18 படைவீரர்கள் பலி

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 27 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈராக்கிலுள்ள பாரிய இராணுவத் தளமொன்றுக்குள் ஐ.எஸ்.ஐ.எஸ்-இன் தற்கொலைதாரிகள் புகுந்ததில் குறைந்தது பதினெட்டு படைவீரர்கள் கொல்லப்பட்டதாக இராணுவ மூலம் ஒன்று தெரிவித்துள்ளது.

தவிர, அன்பார் மாகாணத்திலுள்ள ஐன் அல்-அசாட் இராணுவத் தளத்துக்குள் நுழைந்த அனைத்து, பத்து ஐ.எஸ்.ஐ.எஸ் தாக்குதலாளிகளும் கொல்லப்பட்டதாகவும் அத்தகவல் மூலம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மேற்கூறப்பட்டோரில் எட்டுப் பேரை படைவீரர்களால் கொல்லப்பட்டதாகவும் எனினும் தப்பித்த இரண்டு பேர், தங்களை வெடிக்க வைத்ததாகவும் ஈராக் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஐக்கிய அமெரிக்கா தலையீட்டை மேற்கொண்ட பின், இரண்டாவது மிகப்பெரிய அமெரிக்கத் தளமாக ஐன் அல்-அசாட் காணப்படுகையில், அங்கு, குறைந்தது முந்நூறு ஐக்கிய அமெரிக்க இராணுவ ஆலோசகர்களும் பயிற்சியாளர்களும் ஈராக்கியத் துருப்புக்களுக்கு ஆதரவளிப்பதுக்கு உள்ளனர்.

ஐக்கிய அமெரிக்காவின் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் எந்த வசதியையும் நெருங்க முன் தாக்குதலாளிகள் கொல்லப்பட்டதாக இராணுவ மூலங்கள் தெரிவித்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X