2021 ஜனவரி 23, சனிக்கிழமை

உப ஜனாதிபதி வேட்பாளராக மைக் பென்ஸை தெரிவு செய்த ட்ரம்ப்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 15 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்ப், இந்தியானா மாநில ஆளுநரான மைக் பென்ஸை தனது உப ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பென்ஸினது தெரிவை இன்று அறிவிக்க ட்ரம்பின் பிரசார முகாம் திட்டமிட்டிருந்த போதும், பிரான்ஸின் நீஸில் இடம்பெற்ற தாக்குதலால் குறித்த நிகழ்வானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வாய்ப்பினை பென்ஸ் ஏற்றுக் கொண்டுள்ளதாக ட்ரம்பின் பிரசார முகாம் மூலங்கள் தெரிவிக்கின்றபோதும், தனது இறுதி முடிவை தான் எடுக்கவில்லை என ட்ரம்ப் நேற்றுத் தெரிவித்துள்ளார்.

நியூ ஜேர்ஸி ஆளுநர் கிறிஸ் கிறிஸ்டி, கீழவையின் முன்னாள் சபாநாயகர் நியூட் ஜிங்ரிச் ஆகியோரும் ட்ரம்ப்பின் உப ஜனாதிபதி வேட்பாளர்களாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .